ஒலிம்பிக் மாரத்தான் ஓட்ட போட்டியின் போது, தண்ணீர் போத்தல்கள தட்டி விட்ட பிரான்ஸ் வீரரின் மோசமான செயல்; சர்ச்சையை கிளப்பிய காணொளி

பிரான்ஸ் வீரர் ஒருவர் ஒலிம்பிக் போட்டியின் போது செய்த மோசமான செயல் குறித்த காணொளி ஒன்று சர்ச்சையை கிளப்பியுள்ளது.

பிரான்ஸ் சார்பில் ஓட்டப்பந்தயத்தில் கலந்து கொண்ட Morhad Amdouni (33) ஆண்களுக்கான ஒலிம்பிக் மாரத்தான் போட்டியின் போது களைத்துப் போயிருந்த வீரர்கள் குடிப்பதற்காக வைக்கப்பட்டிருந்த தண்ணீர் பாட்டில்களை கையால் கீழே தள்ளி விட்டுள்ளார்.

இதன் காரணமாக அவருக்கு பின்னால் ஓடி வந்து கொண்டிருந்த வீரர்களுக்கு தண்ணீர் பாட்டில் கிடைக்காத நிலை ஏற்பட்டது.

இதனால் பலரும் Amdouni மற்ற வீரர்களுக்கு தண்ணீர் பாட்டில் கிடைக்கக் கூடாது என்பதற்காகவே இவ்வாறு செய்துள்ளார் என்று குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளனர்.

மேலும் வீரர்கள் அனைவரும் ஒலிம்பிக்கில் கலந்து கொண்டு தங்கள் நாட்டுக்கு பெருமை சேர்க்க வேண்டும் என போராடும் நிலையில் பிரான்ஸ் வீரரான Amdouni மட்டும் தனது நாட்டிற்கு அவப்பெயரை ஏற்படுத்தியுள்ளார் என பலரும் கூறி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here