பெர்டானா புத்ராவில் இருந்து இஸ்தானா நெகாராவிற்கு புறப்பட்டார் பிரதமர்

பிரதமர் டான் ஸ்ரீ முஹிடின் யாசின் புத்ராஜெயாவை விட்டு வெளியேறி இஸ்தானா நெகாராவுக்குச் சென்று கொண்டிருக்கிறார்.

அவரது வாகன அணிவகுப்பு திங்கள்கிழமை (ஆகஸ்ட் 16) நண்பகல் பெர்டானா புத்ராவிலிருந்து வெளியேறியது. முன்னதாக, அவர் தனது அமைச்சரவை உறுப்பினர்களுடன் ஒரு சிறப்பு சந்திப்பை நடத்தினார்.

முஹிடினுக்கு நண்பகலில் மாமன்னருடன் ஒரு திட்டமிடப்பட்ட சந்திப்பு உள்ளது. அங்கு அவர் பிரதமர் பதவியை ராஜினாமா செய்வார் என்று பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here