டாக்டர் நிர்மலா சுப்ரமணியம் கோவிட்-19 தொற்று நோய்க்கு பலி; சுகாதார இயக்குநர் இரங்கல்

பெட்டாலிங் ஜெயா: கோவிட் -19 காலத்தில் தோளோடு தோள் நின்றவரான டாக்டர் நிர்மலா சுப்ரமணியத்தின் மரணம் குறித்து சுகாதார இயக்குநர் ஜெனரல் டான்ஸ்ரீ டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தனது வருத்தத்தை முகநூலில் தெரிவித்திருந்தார்.

வெள்ளிக்கிழமை (ஆகஸ்டு 20) அவர் தனது பேஸ்புக் பதிவில், “கடந்த 20 மாதங்களாக நாங்கள் ஒன்றாக போராடி வந்த எங்கள் சொந்த சகாக்களை இழப்பது மிகவும் வருத்தமளிக்கிறது” என்றார்.

மேலும், சுகாதார அமைச்சின் மருத்துவமனை மேலாண்மை சேவைகள் பிரிவின் பொது சுகாதார மருத்துவ நிபுணர் டாக்டர் நிர்மலா சுப்ரமணியம் கோவிட் -19 தொற்றுக்குள்ளாகி மரணமடைந்ததாக நம்பப்படுகின்றது.

டாக்டர் நிர்மலா ஒரு இனிமையான மற்றும் மிகவும் கடமை உணர்வுள்ளவர் என்று அவர் நினைவுகூர்ந்தார்.

அண்மையில் நடந்த கூட்டத்தில் டாக்டர் நிர்மலாவின் புகைப்படத்தை உள்ளடக்கிய அவரது பதிவில், அவரது குடும்பத்தினருக்கும், பெர்கிட்மாதான் பெங்குருசான் மருத்துவமனை, பெருபத்தான் கே.கே.எம் திட்டத்தினருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள் என்றும் பதிவில் தெரிவித்திருந்தார்.

டாக்டர் நூர் ஹிஷாமின் இடுகை 35,500 க்கும் மேற்பட்ட பார்வைகளைப் பெற்றுள்ளதுடன் பல மலேசியர்கள் தங்கள் இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here