நாட்டை வழிநடத்த என் தந்தைக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள்; பிரதமர் மகன் வேண்டுகோள்

குவாந்தான்: புதிதாக நாட்டின் 9 ஆவது பிரதமராக பதவி ஏற்றுள்ள இஸ்மாயில் சப்ரி யாக்கோப்பிற்கு கோவிட் -19 தொற்றுநோயால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நாட்டை புத்துயிர் பெறச்செய்வது சற்றுக் கடினமான பணியாகும்.

எனவே, அம்னோ துணைத் தலைவரும் புதிய பிரதமருமான இஸ்மாயில் சப்ரியின் மகன் நஷ்ரிக் இஸ்மாயில் சப்ரி, (29) தேசத்தை வழிநடத்துவதில் தனது திறனை நிரூபிக்க ,பொதுமக்கள் தனது தந்தைக்கு ஒரு வாய்ப்பை வழங்குவார்கள் என்று நம்புவதாக கூறினார்.

“மலேசியர்கள் அவருக்கு (இஸ்மாயில் சப்ரிக்கு) தேசத்தை வழிநடத்துவதற்கு ஒரு வாய்ப்பை வழங்குவார்கள் மற்றும் அவர்களின் அன்பான பிரார்த்தனைகளையும் அவருக்காக செய்வார்கள் என நம்புகின்றேன்” என்றார்.

“இது எளிதான பணி அல்ல, ஆனால் அவர் நம் நாட்டை மறுவாழ்வுக்கு கொண்டுவருவதற்கு தன்னால் முடிந்தவரை முயற்சி செய்வார் என்று நாங்கள் நம்புகிறோம்,” என்று பெர்னாமாவுடன் தொடர்பு கொண்டபோது அவர் கூறினார்.

நான்கு உடன்பிறப்புகளில் மூன்றாவதான நஸ்ரி தொடர்ந்து கூறுகையில், அவரது தந்தை பெற்ற பரந்த அனுபவத்தைக் கொண்டு, அவர் தனது புதிய பொறுப்புகளை நன்றாக நிறைவேற்ற முடியும் என்றும் கூறினார்.

பிரதமராக நியமிக்கப்படுவது குறித்து இஸ்மாயில் சப்ரியின் நிலை பற்றி கேட்டபோது, ​​நஷ்ரிக் கூறினார்: “அவர் அல்லாஹ்வுக்கு நன்றியுடையவராகவும், அவரை பிரதமராக நியமித்த மாட்சிமை தங்கிய பேரரசருக்கும் நன்றி தெரிவித்தார்.” என்றார்.

மேலும் ப்பேரா (Bera) எம்.பி.யின் பண்புகளையும் நஷ்ரி பகிர்ந்து கொண்டார், அவரைப் பொறுத்தவரை, அரசாங்கத்திலும் கட்சியிலும் தனது கடமைகளில் மும்முரமாக இருந்தாலும், குடும்பத்திற்கு நெருக்கமான ஒரு அன்பான நபர் என்றார்.

மேலும் இஸ்மாயில் புதிய பிரதமராக இன்று பிற்பகல் 2.30 மணிக்கு பதவியேற்றது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here