கெடா மாநிலத்திற்கு வெள்ள நிவாரணமாக 78 மில்லியன் ஒதுக்கீடு : பிரதமர் அறிவிப்பு

அலோர் ஸ்டார்:  கெடா மாநில வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசாங்கம் 78 மில்லியன் நிதியை ஒதுக்கீடு செய்யும் என்பதோடு சேதமடைந்த உள்கட்டமைப்பு சரிசெய்யப்பட்டு, வீடுகளுக்கு சேதம் அடைந்தவர்களுக்கு உடனடி பண உதவி வழங்கப்படும்.

பிரதமராக தனது முதல் பொது நடவடிக்கையில், இஸ்மாயில் சப்ரி யாகோப் நிதியை அங்கீகரித்தார். மேலும் யான் மற்றும் மெர்போக் பகுதியில் உள்ள ஆறுகள் மற்றும் நீர்ப்பாசன கால்வாய்களை சரிசெய்யுமாறும் அவர் உத்தரவிட்டார்.

இன்று யான் பத்திரிகையாளர் சந்திப்பில், பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்திற்கும் RM500 மற்றும் சம்பவத்தில் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு RM5,000 வழங்கப்படும் என்று கூறினார்.

பாதிக்கப்பட்ட பகுதியில் சேதமடைந்த வீடுகள் மற்றும் கம்போங் சாலைகளை சரிசெய்ய மற்றொரு RM3 மில்லியன் ஒதுக்கப்படும். தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கும், வெள்ளத்தில் சொத்து இழப்பால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள் என்று அவர் கூறினார்.

கடந்த வாரம் ஏற்பட்ட 1.5 மீட்டர் உயர வெள்ளப்பெருக்கின் காரணமாக 1,000 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வெள்ள நீரால் பாதிக்கப்ட்டனர். வெள்ளத்தில் ஆறு பேர் இறந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here