இன்று 20,897 பேருக்கு கோவிட் தொற்று

கடந்த 24 மணி நேரத்தில் 20,897 கோவிட் -19 தொற்றினை  சுகாதார அமைச்சகம் பதிவு செய்துள்ளது. முகநூல் பதிவில், சுகாதார தலைமை இயக்குநர்  டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா, மொத்த தொற்றுநோய்களின் எண்ணிக்கை இப்போது 1,746,254 ஆக உள்ளது.

சிலாங்கூரில் 4,371 வழக்குகள் பதிவாகியுள்ளன. இதைத் தொடர்ந்து சபா (2,594), சரவாக் (2,285), ஜோகூர் (2,159), கெடா (1,942), பினாங்கு (1,732), கிளந்தான் (1,479), பேராக் (1,204), கோலாலம்பூர் (1,003), பகாங் (798), தெரெங்கானு (608), மலாக்கா (417), நெகிரி செம்பிலான் (215), பெர்லிஸ் (64), புத்ராஜெயா (25) மற்றும் லாபுவான் (1). கிளந்தான்  ஆகஸ்ட் 25 அன்று 1,424 வழக்குகளைத் தாண்டி புதிய இன்று அதிகளவிலான தொற்றுநோய்களை பதிவு செய்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here