தேசிய பூப்பந்து வீராங்கனை ஜின் வெய் உடல்நலக் குறைவு காரணமாக 21 வயதில் ஓய்வு பெறுவதாக அறிவிப்பு

கோலாலம்பூர்: தேசிய பூப்பந்து வீராங்கனை கோ ஜின் வெய் உடல்நலக் குறைவு காரணமாக பேட்மிண்டனில் இருந்து ஓய்வு பெறுவதாக இன்று அறிவித்தார்.

முன்னாள் SEA கேம்ஸ் சாம்பியனான அவர், 2019 இல் தனது பெருங்குடல் தொடர்பான அறுவை சிகிச்சைக்குப் பிறகு, “ஒவ்வொரு நாளும் மேலும் மேலும் மருந்துகளை எடுத்துக்கொண்டார் என்றும் அதனால் உடல் நிலை சரியில்லாமல் ஆகிவிட்டதாகவும் “ கூறினார்.

இதனை ஏழு நிமிடங்கள் 27 வினாடி உள்ள ஒரு வீடியோவின் மூலம் யூடியூப்பில் பதிவேற்றியிருந்தார்.

மேலும் மலேசியாவின் பூப்பந்து சங்கம் மற்றும் அதன் தலைவர் முகமட் நோர்சா ஜகாரியா, மற்றும் அவரது சக பயிற்சியாளர்கள் மற்றும் நண்பர்கள் உட்பட பல தரப்பினருக்கும் அவர் நன்றி தெரிவித்தார்.

2024 இல் பாரிஸ் ஒலிம்பிக்கில் மலேசியாவின் நம்பிக்கையில் நட்சத்திரமாக இவர் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பினாங்கின் புக்கிட் மெர்தாஜத்தை சேர்ந்த ஜின் வெய், தனது ஆறு வயதிலிருந்தே ஒரு பேட்மிண்டன் வீராங்கனையாகவும், தனது முதல் 12 வயதுக்குட்பட்ட கிராண்ட் பிரிக்ஸ் பைனல்கள் மற்றும் மலேசிய பள்ளி விளையாட்டு கவுன்சில் சாம்பியன்ஷிப்பை 11 வயதில் வென்றார். மேலும் தனது 14 வயதில் தேசிய அணியில் சேர்க்கப்பட்டார் அத்தோடு 2017 SEA விளையாட்டுக்களில் தங்கம் வென்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here