உயரமாக வளர வேண்டும் என்ற தாயாரின் ஆசையால் அதீத உடற்பயிற்சி செய்த மகளுக்கு நேர்ந்த பரிதாபம்; சீனாவில் சம்பவம்

தாயின் பேச்சுக்கு மறுவார்த்தை கூறாமல் உடற்பயிற்சி செய்த மகளுக்கு நடக்கமுடியாமல் போன சம்பவம் சீனாவில் இடம்பெற்றுள்ளது.

சீனாவில் உள்ள ஜென்ஜியாங் மாகாணத்தில் இளம் பெண் ஒருவர் தனது தனது மகள் மற்றவர்களைப் போல உயரமாக வளர வேண்டும் என்பதற்காக நாள்தோறும் அவரை ஸ்கிப்பிங் போடும்படி கூறியுள்ளார். சிறுமியும் தாயின் பேச்சுக்கு மறுவார்த்தை சொல்லாமல் தினமும் ஸ்கிப்பிங் செய்து வந்துள்ளார்.

சில நாட்கள் கழித்து சிறுமி தனது முழங்கால் வலிப்பதாகக் தனது தாயிடம் கூறியுள்ளார். ஆனால் தாய் அதை பொருட்படுத்தாமல் சிறுமியை உடற்பயிற்சி செய்யச் சொல்லி வற்புறுத்தியுள்ளார். தொடக்கத்தில் ஆயிரம் முறை ஸ்கிப்பிங் செய்ய வேண்டும் என்று சொன்ன நிலையில் நாளடைவில் 3000 முறையாக உயர்ந்துள்ளது. இதனை அவர் மூன்று மாதங்களாக தொடர்ந்து செய்துள்ளார்.

இந்நிலையில் ஒரு நாள் சிறுமிக்கு நடக்க முடியாமல் போயுள்ளது. இதன் பின்னர் சிறுமியின் தாய் அதிர்ச்சியடைந்து மருத்துவரிடம் அழைத்துச் சென்றுள்ளார். அப்போது அவரை பரிசோதனை செய்த மருத்துவர் அந்த சிறுமிக்கு இழுவை அப்போபிசிடிஸ் இருப்பதாக கூறியுள்ளார்.

குறிப்பாக அதிக அளவில் ஸ்கிப்பிங் செய்ததே இதற்கு காரணம் என்றும் மருத்துவர் தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது. தனது மகள் உயரமாக வளர வேண்டும் என்பதற்காக தாய் செய்த காரியம் இன்று மகளை இப்படியான நிலைக்கு தள்ளியுள்ளமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here