லோரியிலிருந்து மரக்கட்டைகளை அவிழ்க்க முயன்ற ஆடவர்; திடீரென மரக்கட்டை உருண்டு விழுந்ததால் பரிதாபமாக இறந்தார்

தாவாவ்: கம்போங் கலாபகானில், நேற்று, மரக்கட்டைகளை ஏற்றி வந்த லோரியை அவிழ்க்க முயன்றபோது, எதிர்பாராது விழுந்த மரக்கட்டையால் ஆடவர் ஒருவர் பரிதாபமாக இறந்தார்.

நேற்றுக்காலை 7 மணியளவில் நடந்த சம்பவத்தில், மூசா பேகோ தாங் (46) என்பவரே உடலில் பலத்த காயங்கள் ஏற்பட்டதால் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என உறுதி செய்யப்பட்டது.

சம்பவத்திற்கு முன்பு, அந்த வளாகத்தில் பணிபுரிந்து வருபவரான பாதிக்கப்பட்ட ஆடவர், லோரியில் இருந்து மரக்கட்டைகளை அவிழ்த்து கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

எனினும்,லோரியின் மேலிருந்து ஒரு மரக்கட்டை திடீரென உருண்டு விழுந்ததால், தப்பித்து அவ்விடத்திலிருந்து ஓடுவதற்கு முன்னரே மரக்கட்டை பாதிக்கப்பட்டவரின் மேல் விழுந்தது.

தாவாவ் மாவட்ட காவல்துறைத் தலைவர் பீட்டர் உம்புவாஸ் இந்த சம்பவத்தை உறுதிசெய்தார். மேலதிக நடவடிக்கைக்காக அறிக்கை பெறப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.

பாதிக்கப்பட்டவரின் சக ஊழியரால் எடுக்கப்பட்டதாக நம்பப்படும் ஒரு காணொளிப் பதிவு சமூக வலைதளங்களில் பரவியதை அடுத்து இந்த விபத்து பலரின் கவனத்திற்கு வந்தது என்றும் அவர் கூறினார்.

12 -நிமிட காட்சிகள் கொண்ட அந்தக்காணொளியில் ஒரு கனமான இயந்திரந்திரத்திலிருந்து விழுந்த மரக்கட்டை பாதிக்கப்பட்டவர் தக்கியதை காட்டின என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here