பல மணி நேர மழையினால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 5 வயது சிறுமி உள்ளிட்ட இருவர் பலி

கோத்த கினபாலு:  பெனாம்பாங்கில் உள்ள தொழிலாளர் குடியிருப்பில் இன்று பல மணி நேர மழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் ஐந்து வயது சிறுமி உள்ளிட்ட இருவர் பலியாயினர்.

 இறந்தவர்கள் ரோசதிமா அஸ்பிரின் மற்றும் சல்மா ஹமீட் என அடையாளம் காணப்பட்டதாக தீயணைப்பு மற்றும் மீட்பு துறை செய்தி தொடர்பாளர் கூறினார். கட்டுமானத்தில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுக்கான இந்த இருவருடன் ஆறு பேர்  இருந்தனர்.

மாலை 4 மணிக்கு சற்று முன் நடந்த இந்த சம்பவத்தில் இருந்து தப்பிய நால்வர் எட்டு மாத வயதுடைய தயானா சுலாஸ்மில், ஜூலியானா சுலாஸ்மில்,  நோர்சிரா அஸ்பிரின் மற்றும் ரிஸ்தா ஜபின், 22 என அடையாளம் காணப்பட்டனர்.

மாலை 3.57 மணியளவில் நிலச்சரிவு குறித்து எங்களுக்கு எச்சரிக்கை செய்யப்பட்டது என்று செய்தித் தொடர்பாளர் கூறினார். “இருப்பிடத்தை அடைந்ததும், சம்பவ இடத்திலேயே  மருத்துவ அதிகாரிகளால் ஏற்கனவே இரண்டு பேர் இறந்துவிட்டதாக உறுதி செய்யப்பட்டது.”

பிற்பகலில் தொடங்கிய மழை மாநில தலைநகரில் பல பகுதிகளில் திடீர் வெள்ளத்தையும், பெனாம்பாங்கில் பல நிலச்சரிவுகளையும் ஏற்படுத்தியது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here