நாட்டின் மக்கள்தொகையில் 55 விழுக்காட்டினர் முழுமையாக தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர்

பெட்டாலிங் ஜெயா: நேற்றைய தரவுகளின் அடிப்படையில், நாட்டின் மொத்த மக்கள்தொகையில் 17,973,545 பேர் அல்லது 55 விழுக்காட்டினர்  கோவிட் -19 தடுப்பூசியை முழுமையாக  போட்டுக் கொண்டுள்ளனர் என்று கோவிட் -19 தடுப்பூசி வழங்கல் மற்றும் அணுகல் உத்தரவாத சிறப்பு குழு (JKJAV) தெரிவித்துள்ளது.

இன்று அதன் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் பகிரப்பட்ட ஒரு விளக்கப்படத்தில், மொத்த மக்கள்தொகையில் 21,783,871 பேர் அல்லது 66.7 விழுக்காட்டினர்  குறைந்தபட்சம் தடுப்பூசியின் ஒரு டோஸைப் பெற்றுள்ளனர்.

நேற்று 202,298 டோஸ்கள் வழங்கப்பட்டதாகவும், 62,108 பேர் தடுப்பூசியின் முதல் டோஸையும் 140,190 தடுப்பூசியின் இரண்டாவது டோஸையும் பெற்றனர்.

தேசிய கோவிட் -19 நோய்த்தடுப்பு திட்டம் (PICK) மூலம் நிர்வகிக்கப்படும் மொத்த தடுப்பூசி அளவுகள் இப்போது 39,685,414 ஆக உள்ளது.

நாடு முழுவதும் கோவிட் -19 தொற்றுநோயைக் கட்டுப்படுத்த இந்த திட்டம் பிப்ரவரி 24 அன்று தொடங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here