புரட்டாதி மாதம் செய்ய வேண்டியவை, செய்யக்கூடாதவை; ஆன்மிகம் அறிவோம்

புரட்டாதி பெருமாளுக்கு உகந்த மாதம் என அனைவரும் அறிந்ததே. இந்த மாதத்தில் வரக்கூடிய சனிக்கிழமை பெருமாளை வழிபட மிகவும் விஷேசமானது. இறைவனுக்கு என அர்ப்பணிக்கப்பட்ட மாதங்களில் மார்கழி, ஆடி மாதங்கள் வரிசையில் புரட்டாதி மாதமும் மிக முக்கியமானதாகும். இந்த மாதத்தில் என்னவெல்லாம் செய்யக்கூடாது என்பதை நாம் அறிந்து கொள்வோம்.

புரட்டாதி மாதம் செய்யக்கூடாதவை :

புரட்டாதி மாதத்தில் திருமணம் போன்ற சுப காரியங்கள் செய்யக்கூடாது. ஆனால் 60ம் கல்யாணம், வளைகாப்பு, காது குத்துதல் செய்யலாம்.

இந்த மாதத்தில் வாஸ்து நாள் இல்லாத காரணத்தால், புதிதாக வீடு கட்ட, வாஸ்து பூஜை செய்வது, புதிதாக கட்டப்பட்ட வீட்டிற்கு கிருகப்பிரவேசம் செய்து பால்காய்ச்சுவதற்கு புரட்டாதி மாதம் ஏற்றதல்ல.

அதுமட்டுமில்லாமல் புரட்டாதி மாத்தில் வாடகை வீடு மாறுவதும் கூடாது.
இருப்பினும், ஒரு நிலம், மனை வாங்கி பத்திரப் பதிவு செய்ய ஏற்ற மாதமாகும்.

புரட்டாதி மாதம் முழுவதும் அசைவ உணவுகளை முற்றிலும் தவிர்ப்பது அவசியம்.

புரட்டாதி மாதம் ஏன் பெருமாளுக்கு உகந்தது? – புரட்டாசியில் செய்ய வேண்டியது
புரட்டாதி மாதம் என்பது சூரியன், கன்னி ராசியில் சஞ்சாரம் செய்யக்கூடிய காலமாகும். சூரியன் தென் திசை நோக்கி தனது பயணத்தை தொடங்கக்கூடிய மாதம்.

புதன் பகவான் ஆளக்கூடிய கன்னி ராசியில் சூரியன் சஞ்சரிப்பதாலும், புதன் பகவானின் அதிபதியான மகாவிஷ்ணுவை வழிபடுவதால், நமக்கு சனி, ராகு, கேது போன்ற கிரகங்களால் ஏற்படக்கூடிய தோஷங்கள் நீங்கும்.

புதனின் நட்பு கிரகம் சனி பகவான். எனவே சனிக்கிழமைகளில் பெருமாளை வழிபடுவதால் சனி தோஷம் நீங்கி நன்மை அடையலாம். புதன் பகவான் சகல கலைகளிலும் வல்லவர். இவர் ஒருவருக்கு புத்திக் கூரிமை, கல்வி, திறமைகளை அளிக்கக்கூடியவர். அதனால் இவரை வழிபடுவதால் அறிவு பெருகும்.

புரட்டாதி சனிக்கிழமைகளில் பெருமாள் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடத்தப்படும். இந்த நாளில் எம்பெருமானை வணங்கி நல்லருள் பெற்றிடுங்கள்.

மகாளயாபட்சம், மகாளய அமாவாசை… நீங்கள் செய்ய வேண்டிய முக்கிய விஷயங்கள்

புரட்டாதி மாதத்தில் வரக்கூடிய அமாவாசை மகாளய அமாவாசை என்று பெயர். இந்த மாததில் வரக்கூடிய பெளர்ணமிக்கு பின் அமாவாசை வரை வரக்கூடிய 15 நாட்கள் மகாளயபட்சம் என்று பெயர். இந்த நாட்களில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட உகந்த நாட்களாகும்.

இந்துமதம் நமக்கு எடுத்துக் கூறிய இவ்வழிபாடுகளை பின்பற்றி நாமும் எல்லாம் வல்ல இறைவனின் அருளை பெறுவோம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here