உலக ஜூனியர் பாட்மின்டன் : இந்தியா இரண்டாவது வெற்றி

கவுகாத்தி: உலக ஜூனியர் பாட்மின்டன் தொடரில் இந்தியா இரண்டாவது வெற்றி பெற்றது. நேற்று இலங்கையை 2-0 என வீழ்த்தியது.

அசாமின் கவுகாத்தியில், கலப்பு அணிகளுக்கான உலக ஜூனியர் பாட்மின்டன் சாம்பியன்ஷிப் தொடர் நடக்கிறது. மொத்தம் 36 அணிகள், 8 பிரிவுகளாக லீக் சுற்றில் விளையாடுகின்றன.

ஒவ்வொரு பிரிவிலும் முதலிடம் பிடிக்கும் அணி, ‘நாக்–அவுட்’ சுற்றுக்கு முன்னேறும். இந்திய அணி, ‘எச்’ பிரிவில் ஐக்கிய அரபு எமிரேட் (யு.ஏ.இ.,), இலங்கை, நேபாளம் அணிகளுடன் இடம் பெற்றுள்ளது.

முதல் போட்டியில் நேபாளத்தை வென்ற இந்தியா, நேற்று இரண்டாவது போட்டியில் இலங்கையை சந்தித்தது. இதில் இந்திய அணி 2-0 (45-27, 45-21) என்ற கணக்கில் வெற்றி பெற்றது. இந்தியா சார்பில் உன்னாதி ஹூடா, ரக் ஷித்தா ஸ்ரீ உள்ளிட்டோர் வெற்றி பெற்றனர்.

இன்று மூன்றாவது போட்டியில் ஐக்கிய அரபு எமிரேட்சை இந்தியா வீழ்த்தும் பட்சத்தில், ‘நாக் அவுட்’ சுற்றுக்கு (காலிறுதி) முன்னேறலாம். நேற்று நடந்த மற்றொரு போட்டியில் ஜப்பான் 2-0 என அயர்லாந்தை (‘ஏ’ பிரிவு) வீழ்த்தியது. ‘டி’ பிரிவில் சீன அணி 2-0 என இங்கிலாந்தை வென்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here