குளிரூட்டிக்கு (A/C) நிகரான அடர் வெள்ளை நிற பெயின்டை கண்டுபிடித்த ஆராய்ச்சியாளர்கள்

அமெரிக்காவில் உள்ள பர்டியூ பல்கலைக்கழகத்தின் பரிசோதனைக் கூடத்தில் ஆராய்ச்சியாளர்கள், ஏசி எனப்படும் ஏர் கண்டிஷனருக்கு நிகரான அடர் வெள்ளை நிற பெயின்டை உருவாக்கி உள்ளனர்.

அமெரிக்காவில் உள்ள பர்டியூ பல்கலைக்கழகத்தின் பரிசோதனைக் கூடத்தில், ஆராய்ச்சியாளர்கள் இணைந்து, அடர் வெள்ளை நிற பெயின்டை உருவாக்கி உள்ளனர். இந்த வெண்மை நிற பெயின்ட் கின்னஸ் உலக சாதனையும் படைத்து உள்ளது.

உலக வெப்பமயமாதலை தடுக்கும் வகையில் ஆராய்ச்சியாளர்களால் உருவாக்கப்பட்டு உள்ள இந்த வெண்மை நிற பெயின்ட், சூரிய வெப்பத்தில் இருந்து கட்டடத்தை பாதுகாப்பது மட்டுமல்லாமல், குளிர்ச்சியையும் கொடுக்கும் என கூறப்படுகிறது.

இந்த பெயின்ட் 98.1 சதவீதம் அளவுக்கு சூரிய கதிர் வீச்சை பிரதிபலிப்பதுடன், மிகக் குறைந்த அளவே வெப்பத்தை கிரகித்துக் கொள்வதாகவும் கூறப்படுகிறது. இந்த பெயின்டை நாம் ஒரு கட்டடத்தில் அடிக்கும் போது எந்தவொரு ஆற்றலும் இல்லாமலேயே சுற்றுப்புற வெப்பநிலையை குளிர்ச்சியாக வைத்திருக்க உதவும் என கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here