மலேசியா, சிங்கப்பூர் எல்லையை மீண்டும் திறப்பது பற்றி இரு நாட்டு சுகாதார அமைச்சர்களும் கலந்தாலோசனை

கோலாலம்பூர்: இரு நாடுகளுக்கிடையேயான பயணத்தை மீண்டும் தொடங்குவது குறித்து சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுதீன் சிங்கப்பூர் அமைச்சர் ஓங் யே குங்குடன் பேசியதாக வெளியுறவு அமைச்சர் சைஃபுதீன் அப்துல்லா தெரிவித்துள்ளார்.

சிங்கப்பூர் மற்றும் மலேசியா இடையேயான எல்லையை மீண்டும் திறக்கும் யோசனை தொடர்பில் சுகாதார அமைச்சர் சமீபத்தில் தனது சிங்கப்பூர் நண்பருடன் தொலைபேசி மூலம் கலந்துரையாடியுள்ளார் என்பதை நான் புரிந்துகொள்கிறேன்” என்றார்.

“இந்த விவகாரம் விரைவில் தீர்க்கப்படும் என்று நான் நம்புகிறேன், ஏனென்றால் இரு நாடுகளுக்கும் எல்லை மீண்டும் திறக்கப்பட வேண்டும்,” என்று அவர் இன்று நாடாளுமன்றத்தில் நடந்த ராஜாவின் உரையினை தொடர்ந்து அவர் கூறினார்.

தொடர்ந்து பேசிய சைஃபுதீன், இந்த முன்மொழிவை இரு அரசுகளும் ஏற்றுக்கொண்டால், இது போன்றே தாய்லாந்து போன்ற பிற நாடுகளுடனும் மலேசியா தனது எல்லைகளை மீண்டும் திறக்கும் யோசனையை தொடர்பில் புத்ராஜெயா ஆராய முடியும் என்றும் அவர் கூறினார்.

சையத் சதிக் சையது அப்துல் ரஹ்மான் (independent -Muar) தனது உரையில், இவ்வாறு நாடுகளின் எல்லைகளை மீளத்திறப்பதன் மூலமாக, இத்தொற்றுநோய் தாக்கியதில் இருந்து பிரிந்திருந்த குடும்பங்கள் மற்றும் தம்பதிகளுக்கு இரக்கம் காட்டுமாறு அவர் அரசாங்கத்தை வலியுறுத்தினார்.

குடிவரவுத் துறையின் MyTravelPass அமைப்பு மிகவும் அதிகாரப்பூர்வமானது என்றும் அவர் கூறினார், மேலும் நாடுகளில் பிரிந்து வாழும் சில தம்பதிகள் மனநலப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்றும் , இன்னும் சிலர் விவாகரத்து செய்யும் நிலைக்கே தள்ளப்பட்டிருக்கிறார்கள் என்றார்.

இதற்கு பதிலளித்த வெளிவிவகார அமைச்சர் சைபுதீன், இந்த தம்பதியினரின் இக்கட்டான நிலைக்கு அரசு அனுதாபப்படுவதாகவும், பாதுகாப்பு மூத்த அமைச்சர் ஹிஷாமுதீன் ஹுசைன் தலைமையில் நடந்த கோவிட் -19 Ministerial Quarter கூட்டத்தில் இந்த விஷயம் எழுப்பப்பட்டதாகவும் கூறினார்.

“தொற்றுநோய் தாக்கியதில் இருந்து அவர்களில் சிலர் தங்கள் அன்புக்குரியவர்களிடமிருந்து பிரிக்கப்பட்டிருப்பது எனக்கு புரிகிறது. இந்த பிரச்சனையை எப்படி சமாளிப்பது என்று நான் பார்க்கிறேன், ”என்றும் அவர் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here