சீனாவில் பிரபல தனியார் நிறுவனத்தின் குளிர்பானத்தை குடித்த நபர்; அடுத்த 6 மணி நேரத்திற்குள் உயிரிழந்தார்

சீனாவின் பெய்ஜிங் நகரத்தில், 22 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர், பிரபல தனியார் நிறுவனமான கோக்கோ கோலாவின் 1.5 லிட்டர் குளிர்பானத்தை வாங்கி, வெறும் 10 நிமிடங்களில் குடித்தார். அடுத்த 6 மணி நேரத்திற்கு பிறகு அவருடைய வயிறு உப்புசமாகி வீங்கியது. பிறகு, அந்த இளைஞருக்கு கடுமையான வயிற்று வலி ஏற்பட்டது.

இதை அடுத்து குடும்ப உறுப்பினர்கள் அந்த இளைஞரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில், அவருக்கு உடல் நலப் பிரச்னைகள் எதுவும் இல்லை எனத் தெரிய வந்தது. பின்னர், சி.டி., ஸ்கேன் எடுத்து பார்க்கும் போது குடலின் சுவர் மற்றும் போர்டல் நரம்பில் நியூமேடோசிஸ் என்ற அசாதாரண வாயு இருப்பது கண்டறியப்பட்டது.

அதிகப்படியான குளிர்பானத்தை பருகியவுடன், கல்லீரலில் ஆக்ஸிஜன் தட்டுப்பாடு உருவாகி, இஸ்கெமியா உருவாகி உள்ளது. இதனால், நரம்பு பாதிப்புகள் உருவாகி அவர் உயிரிழப்பை எதிர்கொள்ள நேரிட்டுள்ளது. சிகிச்சையில் இருக்கும்போதே அந்த நபர் உயிரிழந்தது மருத்துவர்களுக்கும் அதிர்ச்சியை கொடுத்தது.

தனியார் நிறுவனத்தின் குளிர்பானத்தை அதிகம் பருகியதால், உடலில் உருவாகிய வாயுப் பிரச்னையால் உயிரிழப்பை அந்த இளைஞர் எதிர்கொண்டு உள்ளார் என மருத்துவர்கள் தெரிவித்து உள்ளனர். இந்த சம்பவம் சீனாவில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here