அட்லாண்டிக் கடலுக்குள் பாய்ந்த லா பால்மா எரிமலைக் குழம்பு- பதற வைக்கும் படங்கள்

ஸ்பெயின் நாட்டின் லா பால்மா தீவில் உள்ள எரிமலை வெடித்துச் சிதறியதில் 9 நாட்களுக்குப் பிறகு லாவா எரிமலைக் குழம்பு மலையிலிருந்து பாய்ந்து அட்லாண்டிக் கடலுக்குள்  விழுந்தது. 

 ஆயிரக்கணக்கானோர் வெளியேற்றப்பட 3 கிராமங்களில் முற்றிலும் லாக் டவுன்

இதனையடுத்து சாம்பல் புகையும் நச்சு வாயுக்களுடனும் ரத்தக்களறியான காட்சிகள் அங்கு எழுந்துள்ளன. செப்.19ஆம் தேதி எரிமலை வெடித்து லாவா வெளிவரத் தொடங்கி 6.5 கிமீ தூரம் பாய்ந்து தீவின் ஓரத்துக்கு சீறிப் பாய்ந்ததுகாம்ப்ரே வியேயாவிலிருந்து பாய்ந்து வந்த எரிமலைக் குழம்பு குறைந்தது 656 கட்டிடங்களை சாம்பலாக்கியது. நிறுத்த முடியாமல் கடல் நோக்கிப் பாய்ந்தது.

 கடலுக்குள் பாய்ந்த லாவா வெடிப்புகளை ஏற்படுத்தும் நச்சு வாயுக்களின் மேகங்கள் உருவாகும் எனவே கானரி தீவில் வெளியே இருப்போரை பாதுகாப்பான இடத்துக்கு விரையுமாறும் மற்றவர்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் எனவும் அதிகாரிகள் எச்சரித்தனர்.லாவா லா பால்மாவின் கானரி தீவுக்க்கு கடலை அடைந்தது. பிளாயா நுயேவா என்று அழைக்கப்படும் லாஸ் குயிரெஸ் கடற்கரையை அடைந்து கடலுக்குள் சீறிப்பாய்ந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here