ஆரோக்கிய வாழ்விற்கு கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டியவை

மனித வாழ்வில் தினசரி பழக்கம் என்று சில இருக்கும். அதில் சில பழக்கங்கள் பொதுவான பழக்கவழக்கங்களாக இருக்கவும் வாய்ப்புள்ளது. அப்படிப்பட்ட பொதுவான பழக்க வழக்கங்களாக நாம் கடைப்பிடிக்க வேண்டிய சிலவற்றை இங்கே பார்க்கலாம். தினமும் நாம் உண்ணும் உணவுகளில், ஒரு வேளை உணவு பழங்களாக மட்டுமே இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள்.

பலருக்கும் வாழ்க்கையில் இருக்கும் பிரச்சினைகளில் ஒன்று மலச்சிக்கல். இந்தப் பிரச்சினையில் இருந்து விடுபட நினைப்பவர்கள், தினமும் இரண்டு முறை மலத்தை வெளியேற்றுங்கள்.

தினமும் மூன்று வேளை உணவருந்த வேண்டும் என்பது வகுக்கப்பட்ட விதி. ஆனால் சிலர் அந்த நேரத்தில் அந்த வேலையை முடித்துவிட வேண்டும் என்பது போல, பசிக்கா விட்டாலும் உணவை வயிற்றுக்குள் தள்ளிவிடுவார்கள். அப்படி செய்தால் உடல்நலத்தில் பிரச்சினை வரலாம்.

எனவே மூன்று வேளையும் நன்றாக பசித்த பின்பே உணவருந்துவது நல்லது. தினமும் குறைந்தது 40 நிமிடங்களாவது நடைபயிற்சியை மேற்கொள்வதை வழக்கமாக்கிக்கொள்ளுங்கள். தினமும் 5 நிமிடம் மூச்சுப் பயிற்சி செய்வது, நம் மனதை உற்சாகமாக வைத்துக்கொள்ள உதவும்.

இனிப்பு, கசப்பு, துவர்ப்பு, கார்ப்பு, உவர்ப்பு, புளிப்பு ஆகிய ஆறுசுவைகளையும், தினமும் ஏதாவது ஒரு வகையில் சேர்த்துக் கொள்வது சாலச்சிறந்தது. வாரத்தில் ஏழு நாட்கள். அதில் ஒரு நாள் நம் உடலில் எண்ணெய் தேய்த்துக் குளிப்பது நன்மை பயக்கும்.

இன்றைய காலகட்டத்தில் செல்போன், டிவிகளில் மூழ்கிப் போகிறவர்கள் அதிகமாக இருக்கிறார்கள். அதற்காக தூக்கத்தை தொலைக்கவும் அவர்கள் தயாராக இருக்கிறார்கள். அது காலப்போக்கில் உடலில் பல பிரச்சினைகளை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. எனவே தினமும் 8 நேர தூக்கம் அவசியம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here