கோலாலம்பூர்:
PTPTNக்கு இதுவரை மொத்தம் 32.29 பில்லியன் ரிங்கிட்டை திருப்பிச் செலுத்தப்படவில்லை என்று, உயர் கல்வியமைச்சர் டத்தோஶ்ரீ டாக்டர் ஜம்ரி அப்துல் காதிர் தெரிவித்துள்ளார்.
PTPTN எனபடும் தேசிய உயர் கல்வி நிதி கழகம் கிட்டத்தட்ட 3,951,404 பேருக்கு கடன் வழங்கியுள்ளது என்றும், இதில் கடந்த ஆண்டு மொத்தமாக 71 பில்லியன் ரிங்கிட் கடனாக வழங்கப்பட்டுள்ளது என்றும் அவர் சொன்னார்.
இதில் 2.7 மில்லியனுக்கும் அதிகமான கடன்கள் திருப்பிச் செலுத்தப்படவில்லை என்றும், அதில்
மொத்தமாக 32 பில்லியன் ரிங்கிட் நிலுவையில் உள்ளது என்றும், லாபிஸ் நாடாளுமன்ற உறுப்பினர் பாங் ஹோக் லியோங் மக்களவையில் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் எழுத்துப்பூர்வமாக இவ்வாறு பதிலளித்தார்.























