மலாக்கா: கடந்த ஜூன் மாதம் தேசிய மீட்புத் திட்டத்தின் (NRP) முதல் கட்டத்தில் இருந்து மாநில காவல்துறை மொத்தமாக 7.2 மில்லியன் அபராத அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.
NRP இன் 1 ம் கட்டம் மற்றும் 2 ம் கட்டத்தின் (phase 1 & 2) போது 2,226 அபராத அறிக்கை வழங்கப்பட்டதாக மலாக்க போலீஸ் தலைமை அதிகாரி அப்துல் மஜிட் முகமட் அலி கூறினார்.
மேலும் 6.7 மில்லியன் வெள்ளி மதிப்புள்ள 2,060 அபராத அறிவிப்புகள் முதல் கட்டத்தின் (Phase 1) போது ஜூன் 1 முதல் செப்டம்பர் 3 வரை வழங்கப்பட்டன என்றார்.
இவற்றுள் “6.7 மில்லியன் வெள்ளி அபராதத்தொகை தனிநபர்களுக்கு வழங்கப்பட்டவை ஏனைய 910,000 வெள்ளி அபராதத்தொகை நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டது,” என்று அவர் வியாழக்கிழமை (செப்.30) கூறினார்.
முதல் கட்டத்தின் போது, 6,603 மோட்டார் வண்டிகள் உட்பட மொத்தமாக 3,544,965 வாகனங்கள் சாலைத் தடுப்புகளில் சோதனை செய்யப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டதாகவும், மாநிலங்களுக்கு இடையே பயணிக்கும் அனுமதி கோரி 379,461 விண்ணப்பங்கள் வந்ததாகவும் அவற்றில் 4,851 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதாகவும் டிசிபி அப்துல் மஜிட் குறிப்பிட்டார்.
செப்டம்பர் 4 ம் தேதி முதல் வியாழக்கிழமை (செப்.30) வரை NRP யின் 2 வது கட்டத்திற்கு, மொத்தமாக 508,500 வெள்ளி மதிப்புள்ள 166 அபராத அறிவிப்புகள் வழங்கப்பட்டன என்றும் அவர் தெரிவித்தார்.
அவற்றில் 398,500 வெள்ளி மதிப்புள்ள அபராத அறிவிப்புகள் தனிநபர்களுக்கு வழங்கப்பட்டன என்றும் 110,000 வெள்ளி மதிப்புள்ளவை நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டவை என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும் இந்த காலகட்டத்தில், 387,405 வாகனங்களை சோதனையிட்டதாகவும் 1,138 வாகனங்களை திருப்பி அனுப்பியதாகவும் அவர் கூறினர்.
மேலும் மாநிலங்களுக்கு இடையேயான பயணத்திற்கு அனுமதி கேட்டு 26,143 விண்ணப்பங்கள் பெறப்பட்டன என்றும் அதில் 1,138 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன என்றும் அவர் கூறினார்.





























