சன்டகான்: பண்டார் சிபுகா ஜெயாவின் ஜாலான் லாபு பகுதியில் உள்ள வடிகால் அருகில், கேபிள் திருடும் போது மின்சாரம் தாக்கி இறந்திருக்கலாம் என நம்பப்படும் ஆடவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டது.
35 வயதான அந்த வெளிநாட்டவரின் சடலம் இன்று காலை 6.30 மணியளவில் பொதுமக்களால் கண்டுபிடிக்கப்பட்டதாக சன்டகான் மாவட்ட காவல்துறை தலைவர் முஹமட் அசார் ஹாமின் கூறினார்.
“முதற்கட்ட விசாரணையில், பாதிக்கப்பட்டவரது சடலம் கண்டுபிடிக்கப்பட்டபோது அவரது உடலில் இணைக்கப்பட்டிருந்த மின்சார கேபிளின் அடிப்படையில் அவர் மின்சாரம் தாக்கி இறந்ததாக நம்பப்படுகின்றது என்றார்.
“உடலுக்கு அருகில் கம்பி வெட்டிகள், ஸ்க்ரூடிரைவர்கள் மற்றும் கத்திகள், வெட்டப்பட்ட மின் கேபிள்கள் மற்றும் வீட்டை உடைக்கும் கருவிகள் கண்டுபிடிக்கப்பட்டதால் பாதிக்கப்பட்டவர் கேபிள் திருட்டில் ஈடுபட்டார்,” என்று அவர் ஒரு அறிக்கையில் கூறினார்.
மேலும் இந்த வழக்கு திடீர் மரணம் என்று வகைப்படுத்தியதாகவும் அவர் கூறினார்.
























