சபா: மின்சாரத்தை மீட்டெடுக்க `SESB’ நிறுவனம் 27 நடமாடும் மின் உற்பத்தி ஜெனரேட்டர்களை பயன்படுத்துகிறது!

கோலாலம்பூர்:

Sabah Electricity Sdn Bhd – SESB) நிறுவனம், மின்சார விநியோகத்தை, அவசரமாக மீட்டெடுக்க, கிழக்குக் கடற்கரை மாவட்டங்களில், 27 நடமாடும் மின் உற்பத்தி ஜெனரேட்டர்களை பயன்படுத்தியுள்ளது. இந்த ஜெனரேட்டர்கள் பெலுரான், கினபாத்தாங்கான், சண்டாக்கான், செம்போர்ணா, தாவாவ், லஹாட் டத்து தெலுபிட் ஆகிய மாவட்டங்களில், முக்கிய வசதிகளான, மருத்துவமனைகள், காவல்துறை நிலையங்கள், நீர் சுத்திகரிப்பு ஆலைகள், தீயணைப்பு நிலையங்கள் ஆகியவற்றுக்கு, மின்சாரத்தை, வழங்கி வருகின்றன.

பெலுரான், கினபத்தாங்கானில், தலா, ஏழு ஜெனரேட்டர்களும் சண்டாக்கானில், நான்கு ஜெனரேட்டர்களும் செம்போர்ணாவில், நான்கு ஜெனரேட்டர்களும், தாவாவ், லஹாட் டத்துவில், தலா, இரண்டு ஜெனரேட்டர்களும், தெலுபிட்டில், ஒரு ஜெனரேட்டர்களும், நிறுவப்பட்டுள்ளன.

தேவைப்பட்டால், அத்தியாவசியசிய சேவைகள், தடையின்றி, இருப்பதை உறுதி செய்ய, மேலும், பல ஜெனரேட்டர்களும், நிறுவப்படும் என்று, `எஸ்.இ.எஸ்.பி.’ நிறுவனம், கூறியுள்ளது.

அதுமட்டுமின்றி, மின்சார மீட்டெடுப்புப் பணிகளின்போது, பொறுமையுடன் இருந்த, பொதுமக்களுக்கு, அது, தனது நன்றியையும், தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here