சர்ச்சைக்குரிய சுவீடன் கார்டூன் ஓவியர்; கார் விபத்தில் மரணம்

2007ம் ஆண்டு, அண்ணல் நபி (ஸல்) அவர்களை கார்டூனாக வரைந்து உலகளாவில் பெரிய எதிர்ப்பலையை உருவாக்கிய சுவீடன் ஓவியர் லார்ஸ் வில்கஸ் வாகன விபத்தில் உயிரிழந்துள்ளதாக உலகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த நபருக்கு 24 மணி நேரமும் விசேட போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்த நிலையில், போலீசாருடன் பயணித்த வாகனம் விபத்துக்குள்ளாகி அவர் உயிரிழந்துள்ளதாக சுவீடன் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

டென்மார்க்கில் உருவான கார்டூன் சர்ச்சையையடுத்து குறித்த நபரும் கார்டூன் வரைந்து சர்ச்சையை உருவாக்கியிருந்தார். இதனையடுத்து சுவீடன் பிரதமர் முஸ்லிம் நாடுகளுடன் நேரடி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு நிலைமையை கட்டுக்குள் கொண்டுவந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here