WhatsAPP-ஐ உருவாக்கியது யார்? ஏன் அதை விற்றார்? உங்களுக்கு தெரியுமா?

நேற்று  WhatsAPP சுமார் 7 மணி நேரம் வேலை செய்யாத காரணத்தினால், சமூகவலைத்தளமே ஸ்தம்பித்து போய்விட்டது என்று கூறலாம். இதற்கு அந்த நிறுவனத்தின் தற்போதைய உரிமையாளரான மார்க் ஜுகோபர்க் மன்னிப்பு கேட்டிருக்கிறார்.

இப்படி நேற்று ஒரு ஏழு மணி நேரம் WhatsAPP  இல்லாததையே பலரால் தாங்க முடியவில்லையே, இப்படி ஒரு அப்டேட்டை உருவாக்கியது யார் தெரியுமா? அவர் எதற்காக இந்த WhatsAPPபை உருவாக்கினார்? அதன் பின் ஏன் அதை பேஸ்புக் நிறுவனத்திற்கு விற்றார் என்பதை பார்ப்போம்.

கடந்த 1976-ஆம் ஆண்டு உக்ரைனில் பிறந்த ஜான் கோம் என்பவர் தான் இந்த வாட்ஸ்ஆப்பின் முதல் வெர்ஷனை கண்டுபிடித்தவர். நடுத்தர யூத குடும்பத்தில் பிறந்த இவரின் குழந்தைப் பருவம் அவ்வளவு மகிழ்ச்சிகரமானதாக அமையவில்லை.

அவருடைய தாயார் இல்லத்தரசி. கட்டுமான மேலாளராக பணியாற்றிவந்த அவரது தந்தையுடைய வருமானத்தின் மூலமாகவே குடும்ப வாழ்க்கை நடந்துவந்தது.

உக்ரைனில் நிலவிய அசாதாரண அரசியல் சூழல் காரணமாக ஜான் கோமின் குடும்பம் உக்ரைனை விட்டு வெளியேறி, அமெரிக்காவில் குடிபெயர்ந்தது. அமெரிக்கா அரசு அளித்த மானியத்தைச் சார்ந்தே வாழ்க்கை நடத்திவந்தது. பின், அமெரிக்க பள்ளியில் சேர்ந்து தன்னுடைய பள்ளிப்படிப்பைத் தொடங்கிய இவர், பிற அத்தியாவசியத் தேவைகளைச் சமாளிக்க மளிகைக் கடையில் பகுதிநேர வேலை சேர்ந்தார்.

இது குறித்து அவர் முன்பு அளித்த பேட்டி ஒன்றில், உக்ரைனில் இருந்து நான் வெளியேறிய போது எனக்கு 16 வயது, அப்போது எனக்கு அமெரிக்காவில் வாழ்க்கையை துவங்குவதற்கு மிகவும் சிரமமாக இருந்தது.

ஏனெனில், அந்த காலக்கட்டத்தில் பள்ளிக்குத் தேவையான நோட் புக் வாங்குவதற்குக்கூட எங்களிடம் பணமில்லை. இதனால், வேறு வழியின்றி உக்ரைனில் இருந்து எடுத்துவந்த பழைய நோட்டுகளைத்தான் பயன்படுத்தினேன்.

என்னுடைய அம்மா குழந்தைகள் பராமரிக்கும் வேலை செய்தார். நான் ஒரு மளிகைக்கடையில் உதவியாளராகப் பகுதிநேர வேலை செய்தேன். நாங்கள் அமெரிக்காவிற்கு புறப்பட்ட போது, நீங்கள் செல்லுங்கள், நான் சில ஆண்டுகள் கழித்து வருகிறேன் என்று என் அப்பா சொல்லிவிட்டார்.

ஆனால், என் அப்பா உக்ரைனிலே இறந்துவிட்டார். அப்பா இறந்த சில ஆண்டுகளிலே என் அம்மாவும் இறந்துவிட்டார். அதன் பின் நான் கல்லூரியில் படித்து கொண்டிருந்த போது, இணைய சர்வர்களுக்கான பாதுகாப்பு சோதனையாளராகப் பகுதிநேர வேலையில் சேர்ந்தேன்.

யாஹூ நிறுவனத்தின் சர்வர் பாதுகாப்பு சோதனைக்காக அங்கு செல்லும்போது அங்குள்ளவர்களுடன் எனக்கு பழக்கம் ஏற்பட்டது. ஒருநாள் கல்லூரியில் இருந்தபோது யாஹூ நிறுவனத்தில் இருந்து சர்வர் பிரச்சனை காரணமாக அழைப்பு வந்தது.

நான் கல்லூரியில் இருக்கிறேன் என்று கூறிய போது, உடனே அங்கிருந்த அதிகாரிகள் அங்கு என்ன செய்துகொண்டு இருக்கிறாய், நீ இருக்க வேண்டிய இடம் இது என்று கூறினர். உடனே நான்கு அப்படியே கல்லூரி படிப்பை பாதியில் நிறுத்துவிட்டு உடனே வேலைக்கு சேர்ந்துவிட்டேன்.

அப்போது அங்கு தான் நண்பர் பிரையன் ஆக்டனை சந்தித்தேன். நாங்கள் இருவரும் ஒத்த சிந்தனை கொண்டவராக இருந்தோம். சில ஆண்டுகள் அங்கு பணியாற்றிவிட்டு வேலையை ராஜினாமா செய்தேன். பின், பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் வேலைக்கு விண்ணப்பித்தேன்.

போதுமான திறமை இல்லை எனக்கூறி என்னை நிராகரித்துவிட்டனர். அந்தக் காலகட்டத்தில் குறுஞ்செய்தி அனுப்புவது என்பது மிகவும் கடினமானதாகவும் அதிகம் செலவாகக்கூடியதாகவும் இருந்தது.

இதனால், இதை எளிமைப்படுத்தும் வகையில் ஒரு செயலி உருவாக்க நானும், என் நண்பனும் சேர்ந்து ஆரம்பித்தோம், அது தான் தற்போது WhatsAPP என அழைக்கப்படுகிறது. முதல் வெர்ஷனை ஆப்பிள் போன்களில் மட்டுமே பயன்படுத்தக்கூடிய வகையில் வடிவமைத்தோம்.

நீங்கள் ஒருவருக்கு போன் செய்யும் முன் அவருக்கு மெசேஜ் செய்து அவர் போன் பேசும் நிலையில் இருக்கிறாரா என்பதை உறுதிசெய்துவிட்டு அவருக்கு போன் செய்யலாம் என்பதே WhatsAPP முதல் வெர்ஷனின் நோக்கம். அதை உருவாக்கியபோது மிகுந்த மகிழ்ச்சியடைந்தோம்.

துரதிர்ஷ்டவசடமாக அந்த வெர்ஷன் தோல்வியனதால், மிகுந்த வருத்ததை கொடுத்தது. அதன் பிறகு, ஒவ்வொரு அப்பேட்டிலும் ஒரு புதுமையான விஷயத்தை முயற்சி செய்து இன்று சிறப்பான ஒரு WhatsAPP வெர்சனை உருவாக்கியுள்ளோம்.

எங்களின் இந்த அபார வளர்ச்சியைக் கண்ட பேஸ்புக் நிறுவனம், WhatsAPP நிறுவனத்தை வாங்க விருப்பம் தெரிவித்தது. பலகட்ட பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, 16 பில்லியன் அமெரிக்க டாலருக்கு  WhatsAPP நிறுவனத்தை பேஸ்புக்கிடம் விற்றேன் என்று கூறியுள்ளார்.

ஒருவேளை அன்று மட்டும், இவரை பேஸ்புக்கோ, அல்லது டுவிட்டரோ வேலைக்கு எடுத்திருந்தால் வாட்ஸ் அப் என்ற ஒன்று வந்திருக்கும் என்பது சந்தேகமே.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here