12 ஆவது மலேசிய திட்டம் (12 MP) இன்று மக்களவையில் குரல் வாக்கெடுப்புடன் நிறைவேற்றப்பட்டது. பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாகோப் செப்டம்பர் 27 அன்று 12 MPயை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். ஏற்கனவே இருக்கும் திட்டங்களோடு புதிய வளர்ச்சித் திட்டங்களுக்கும் அரசாங்கம் 400 பில்லியனை ஒதுக்குவதாக அறிவித்தார்.
12MP ஐந்தாண்டு காலத்தில் ஆண்டுக்கு 4.5 முதல் 5.5 சதவிகிதம் வரையிலான மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) இலக்கு வளர்ச்சி சில முக்கிய குறிக்கோள்களாகும். இஸ்மாயில் சப்ரி, 12 MP 2025 க்குள் மலேசியாவை அதிக வருமானம் மற்றும் உயர் தொழில்நுட்ப நாடாக மாற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று கூறினார். நாடாளுமன்ற உறுப்பினர்களின் விவாதம் மற்றும் 12MP யில் அமைச்சர்களின் உரைகள் ஏழு நாட்கள் நடந்தன. இன்று அதற்கான கடைசி நாளாகும்.
மாலை 5.50 மணியளவில் பிரதமர் துறை அமைச்சரான முஸ்தபா முகமதுவின் நிறைவு உரைக்கு பிறகு மக்களவை சபாநாயகர் அசார் அஜிசன் ஹாரூன் குரல் வாக்கெடுப்புக்கு அழைப்பு விடுத்தார். அதிகமானோரின் ஆதரவோடு 12 MP சிறிய ஆரவாரத்துடன் நிறைவேற்றப்பட்டது.