பிரதமர் 2021 ஆம் ஆண்டிற்கான தேசிய விளையாட்டு தினத்தை ஆரம்பித்து வைத்தார்

கோலாலம்பூர்: பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப், 2021 ஆம் ஆண்டிற்கான தேசிய விளையாட்டு தினத்தை இன்று காலை புத்ராஜெயாவில் உள்ள மெனாரா KBS -இல் தொடங்கி வைத்தார்.

“ஒரு விளையாட்டு தேசத்தை நோக்கி (Towards A Sporting Nation)” என்ற கருப்பொருளில், இத்தினம் ஆரம்பிக்கப்பட்டது. இது கலப்பின விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கு நடவடிக்கைகளை வளர்ப்பதில் உள்ள முயற்சிகள் மற்றும் வெற்றிகளைக் கொண்டாடுவதை நோக்கமாகக் கொண்டது.

விளையாட்டுத் துறையில் கோவிட் -19 தொற்றுநோயின் தாக்கம் ஆபத்தானது என்று பிரதமர் கூறினார். மேலும் விளையாட்டுத்துறையுடன் தொடர்புடைய 1,968 வணிகங்கள் கடந்த ஆண்டு செயல்பாடுகளை நிறுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது என்றும் அவர் கூறியது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here