90 வயதில்.. விண்வெளிக்கு பறக்கும் கனடா நடிகர்!

கனடா நடிகர் ஒருவர் தனது 90 வயதில் விண்வெளிக்கு செல்லயுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

அமேசான் நிறுவனத்தின் தலைவர் ஜெப் பெசோஸூ தனது சொந்த விண்கலமான புளூ ஆரிஜின் விண்கலத்தில் வருகின்ற 12ஆம் தேதி விண்வெளிக்கு பறக்க இருக்கிறார்.

இவருடன் 90 வயதான பிரபல கனடா நடிகர் வில்லியம் சாட்னர் செல்ல இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

இவர் நடித்த ஸ்டார் டிரெக் தொடரானது மிகவும் பிரபலமானது.இவருடன் சேர்த்து 4 பேர் கொண்ட குழு நியூ ஷெப்பர்டு 18 விண்கலம் மூலமாக விண்வெளிக்கு பயணம் செல்லயுள்ளனர்.

வில்லியம் சாட்னர் பயணம் செய்வதன் மூலம் விண்வெளி பயணம் செல்லும் உலகின் வயதான நபர் என்ற சாதனையை படைக்க இருக்கிறார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here