முன்னாள் பிரதமர் முஹிடினுக்கு எதிராக அவமதிக்கும் கருத்துகளை வெளியிட்டதாக தயாளன் மீது குற்றச்சாட்டு

கோலாலம்பூர்: மலேசிய-சிங்கப்பூர் தொழிலாளர் பணிக்குழு தலைவர் எஸ்.தயாளன், ஐந்து மாதங்களுக்கு முன்பு தனது முகநூல் கணக்கில் முன்னாள் பிரதமர் டான் ஸ்ரீ முஹிடின் யாசினுக்கு எதிராக அவதூறான கருத்துக்களை வெளியிட்டதாக செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று குற்றம் சாட்டப்பட்டது.

இன்று நீதிபதி எம்.எம். எட்வின் பரம்ஜோதி முன்பு தயாளனுக்கு எதிரான குற்றம் படித்துக்காட்டப்பட்டது. ஆனால் அவர் தான் குற்றவாளி அல்ல என்று மறுப்பு தெரிவித்தார்.

மே 30 அன்று இரவு 10.03 மணியளவில், தயாளன் ஶ்ரீபாலன் என்ற முகநூல் கணக்கில் மற்றவர்களை புண்படுத்தும் நோக்கில் முஹிடின் யாசினுக்கு எதிராக அவதூறான பதிவை பதிவிட்டதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

தயாளனின் முகநூல் பதிவினை ஜூன் 2 ம் தேதி இரவு 7.15 மணிக்கு சைபர் கிரைம் மற்றும் மல்டிமீடியா புலனாய்வு பிரிவு அலுவலகத்தின் வணிக குற்ற விசாரணை பிரிவில் உள்ள புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தால் வாசிக்கப்பட்டது.

இக்குற்றம், தகவல் தொடர்பு மற்றும் மல்டிமீடியா சட்டம் 1998 ன் பிரிவு 233 (1) (a) ன் கீழ் வருகிறது, இது குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சமாக 50,000 வெள்ளி அபராதம் அல்லது ஒரு வருடம் வரை சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்க வழிசெய்கின்றது.

துணை அரசு வழக்கறிஞர் நஜிஹா ஃபர்ஹானா சே அவாங் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக 10,000 வெள்ளி ஜாமீனுடன் ஒரு ஆள் பிணையும் வழங்குமாறு நீதிமன்றத்தை கேட்டுக் கொண்டார்.

எனினும், குற்றம் சாட்டப்பட்டவரின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் தினேஷ், குற்றஞ்சாட்டப்பட்டவரது குடும்பத்திற்கு அவரே வாழ்வாதாரமாக இருப்பதால், அவருக்கு குறைந்தபட்ச ஜாமீன் தொகை கோரி மனு செய்தார்.

நீதிமன்றம் 3,000 வெள்ளி ஜாமீனுடன் ஒரு ஆள் பிணையும் வழங்கியதுடன் இவ்வழக்கு நவம்பர் 19 ஆம் தேதிக்கு விசாரணைக்காக ஒத்திவைக்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here