கேக் லோக் சி கோவிலில் தீ விபத்து சேதத்தை சரிசெய்ய சரிசெய்ய பினாங்கு மாநில அரசு 60,000 வெள்ளி ஒதுக்கீடு

ஜார்ஜ்டவுன்: பினாங்கு மாநில அரசு அதன் கட்டிடங்களில் ஒன்றான சீனக்கோயில் தீ விபத்தில் சேதமடைந்ததை அடுத்து, அதனை சரிசெய்ய கேக் லோக் சி கோவிலுக்கு 60,000 வெள்ளி ஒதுக்கீடு செய்யும்.

பினாங்கு முதலமைச்சர் சோவ் கோன் யோவின் கூற்றுப்படி, இஸ்லாமியர்கள் அல்லாத வழிபாட்டுத் தலங்களுக்கான அரசு நிதியிலிருந்து இந்த பணம் வழங்கப்படும் என்றார்.

இன்று இக்கோவிலுக்குச் சென்ற சோவ், கடந்த செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட தீ, பல ஊடகங்களால் அறிவிக்கப்பட்டபடி முழு வளாகத்தையும் சேதப்படுத்தவில்லை என்று தெரிவித்தார்.

“கேக் லோக் சி கோவில் வளாகத்தில் ஏற்பட்ட தீ அதன் ஒரு சிறிய பகுதியை மட்டுமே பாதித்தது என்பதை மாநில அரசு தெளிவுபடுத்த விரும்புகிறது, தீயினால் எற்பட்ட சேதமானது ஊடகங்களில் வெளியிட்டது போல 70 விழுக்காடு அல்ல.

“இது கோவில் வளாகத்தில் உள்ள ஒரு பூஜை அறையில் நடந்தது மற்றும் சேதம் அதன் ஒரு சிறிய பகுதியை மட்டுமே உள்ளடக்கியது” என்று சோவ் தனது அதிகாரப்பூர்வ முகநூலில் ஒரு பதிவில் மூலம் கூறினார்.

கோவில் அறங்காவலரான ஸ்டீவன் ஓய் தீவிபத்தால் ஏற்பட்ட சேதத்தை சரிசெய்ய மாநில ஒதுக்கீடு பயன்படுத்தப்படும் என்று கூறினார்.

மேலும் கோவில் மடாதிபதி வணக்கத்திற்குரிய சியான் குவான் கூறுகையில், தற்போது மறு அறிவித்தல் வரும் வரை கோவில் மூடப்பட்டுள்ளது என்றார்.

கேக் லோக் சி, நாட்டின் மிகப்பெரிய புத்த கோவில் வளாகம் என்று கூறப்படுகிறது. இது 116 ஆண்டுகளுக்கு முன்பு கட்டி முடிக்கப்பட்டது, இதன் ஆரம்ப வேலை 14 ஆண்டுகளுக்கு முன்பு 1891 இல் தொடங்கியது.

10,000 அலாபாஸ்டர் மற்றும் புத்தரின் வெண்கல சிலைகளைக் கொண்ட ஏழு மாடி பகோடா கோவிலின் முக்கிய சிறப்பம்சமாகும், அதைத் தொடர்ந்து 36.5 மீட்டர் குவான் யின் சிலை மலையில் இது அமைந்துள்ளது.

ஏற்கனவே கோவிலில் இருந்த பழைய சிலை தீப்பிடித்ததை தொடர்ந்து, இந்த புதிய சிலை 1990 களின் பிற்பகுதியில் நிறுவப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here