கோலாலம்பூர்:
`ஸாரா கைரினா மகாதீர்’ என்ற, 13 வயதுச் சிறுமியின், மரண விசாரணை, இன்று, ஒத்திவைக்கப்பட்டது.
இந்த மரண விசாரணையில் சாட்சியம் அளிக்க விருந்த ஒரு மாணவரின், தனிப்பட்டத் தகவல், கசிந்து, வாட்ஸ்அப் (WhatsApp) மூலம், பரவியதால், இந்த நடவடிக்கை, எடுக்கப்பட்டது.
இதனிடையே, சாட்சியின், பெயர், முகவரி, அடையாள அட்டை எண், பகிரப்பட்டதால், அவர், சாட்சியமளிக்க, மிகவும் பயப்படுவதாக, அந்தச் சிறுமியின் வழக்கறிஞர், டத்தோ ராம் சிங் (Datuk Ram Singh), விளக்கினார்.
இதன் விளைவாக, மரண விசாரணை அதிகாரி, அமீர் ஷா அமீர் ஹசன் (Amir Shah Amir Hassan), இந்த வழக்கு விசாரணையை ஒத்திவைத்தார்.
மேலும், சம்பந்தப்பட்ட அனைவரும், குழந்தைகளின் அடையாளங்களைப், பாதுகாக்க வேண்டும் என்றும், அவர், கடுமையாக, நினைவூட்டினார்.
ஜூலை 16-ஆம் தேதி, `ஸாரா கைரினா’, தனது, பள்ளியின் தங்கும் விடுதியின் தரை தளத்தில் சுயநினைவின்றி, கண்டெடுக்கப்பட்டார்.
மறுநாள், அவர், சிகிச்சை பலனின்றி மருத்துவமனையிலேயே உயிரிழந்தார்.



















