பட்டர்வொர்த் தாமான் பாகனில் உள்ள ஒரு குடியிருப்பில் இன்று (அக்டோபர் 23) காலை ஒரு பெண் குழந்தை குப்பைத் தொட்டியில் இறந்து கிடந்த நிலையில் மீட்கப்பட்டது. அப்பகுதியின் ருக்குன் தெத்தங்கா (KRT)) தலைவர் மற்றும் இரண்டு தொழிலாளர்கள் அப்பகுதியில் துப்புரவு பணிகளை மேற்கொண்டபோது குழந்தை கண்டுபிடிக்கப்பட்டது.
தொட்டி ஒன்றில் துணியில் சுற்றப்பட்ட நிலையில் குழந்தை இருப்பதை தொழிலாளர்கள் கண்டனர். வடக்கு செபராங் ப்ராய் OCPD உதவி ஆணையர் நூர்சைனி முகமட் நூர் இந்த சம்பவம் குறித்து காவல்துறைக்கு புகார் கிடைத்துள்ளது என்பதை உறுதிப்படுத்தினார். சமீபத்தில் கர்ப்பமாக இருந்தவர்கள் அல்லது சமீபத்தில் குழந்தை பெற்றவர்கள் பற்றிய கூடுதல் தகவல்களைச் சுற்றியுள்ள குடியிருப்பாளர்களின் உதவியுடன் காவல் துறையினர் தேடுகின்றனர் என்று அவர் கூறினார்.