வாஷிங்டன்:
வெனிசுவேலாவின் முன்னாள் அதிபர் நிக்கோலஸ் மதுரோ கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அந்நாட்டின் அபரிமிதமான எண்ணெய் வளங்கள் இப்போது அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் உள்ளதாக அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.
“வெனிசுவேலா இப்போது ஒரு திறந்த நாடு. அங்குள்ள உலகின் மிகப்பெரிய கச்சா எண்ணெய் இருப்புக்கள் இனி அமெரிக்காவிற்குச் சொந்தமானவை” என்று டிரம்ப் தனது சமூக வலைதளப் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த எண்ணெய் வளங்களைப் பயன்படுத்தி அமெரிக்காவின் எரிசக்தி தேவைகளைப் பூர்த்தி செய்யவும், வெனிசுவேலாவின் உடைந்த பொருளாதாரத்தைச் சீரமைக்கவும் போவதாக அவர் கூறியுள்ளார்.
வெனிசுவேலாவின் கச்சா எண்ணெயைச் சர்வதேசச் சந்தையில் அமெரிக்கா விற்கும் என்றும், அதன் மூலம் கிடைக்கும் பில்லியன் கணக்கான டாலர்கள் அமெரிக்காவிற்கும் வெனிசுவேலாவின் புதிய இடைக்கால அரசாங்கத்திற்கும் இடையே பகிரப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீனாவிற்குப் பெரும் அடி: வெனிசுவேலாவிடம் அதிக அளவில் கடன் கொடுத்து, அதன் மூலம் எண்ணெய் பெற்று வந்த சீனாவிற்கு டிரம்ப்பின் இந்த நடவடிக்கை பெரும் சவாலாக அமைந்துள்ளது. சீனாவுடனான அனைத்து எண்ணெய் ஒப்பந்தங்களையும் ரத்து செய்ய டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.
வெனிசுவேலாவின் எண்ணெய் அமைச்சகம் மற்றும் பொதுத்துறை எண்ணெய் நிறுவனமான PDVSA, இப்போது அமெரிக்க அதிகாரிகளின் நேரடிப் மேற்பார்வையில் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
எமுந்தைய ஆட்சிக் காலத்தில் வெளியேறிய அமெரிக்காவின் Chevron, ExxonMobil போன்ற நிறுவனங்கள் மீண்டும் வெனிசுவேலாவில் உற்பத்தியைத் தொடங்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
டிரம்ப்பின் இந்தச் செயல் “நவீன கால காலனித்துவ நடவடிக்கை” (Modern Colonialism) என்று ரஷ்யா மற்றும் ஈரான் போன்ற நாடுகள் கடுமையாகச் சாடியுள்ளன. ஐக்கிய நாடுகள் சபையில் (UN) இது தொடர்பாக அவசர விவாதம் நடத்தப்பட வேண்டும் என்றும் கோரிக்கைகள் எழுந்துள்ளன.
இருப்பினும், டிரம்ப் நிர்வாகம் தனது முடிவில் உறுதியாக உள்ளது. “வெனிசுவேலா மக்களை சர்வாதிகாரத்திடமிருந்து மீட்டெடுத்ததற்கான இழப்பீடாகவே” இது பார்க்கப்பட வேண்டும் என்று வெள்ளை மாளிகை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன























