2.3 மெட்ரிக் டன் கெத்தும் இலைகளை கடத்திய இருவர் மலேசிய கடல்சார் போலீசாரால் கைது!

கோலா பெர்லிஸ், ஜனவரி 18 :

கோலா பெர்லிஸில் 2.3 டன் கெத்தும் இலைகளை கடத்தும் முயற்சியை மலேசிய கடல்சார் அமலாக்க துறையினர் (MMEA) முறியடித்து, அக்கடத்தலில் ஈடுபட்டதாக நம்பப்படும் இருவரையும் கைது செய்தனர்.

கடத்தல்காரர்களால் அண்டை நாட்டிற்கு எடுத்துச் செல்வதற்கு முன்னர், அவர்களது கடத்தல் நடவடிக்கை தடுக்கப்பட்டது என்று கெடா மற்றும் பெர்லிஸ் கடல்சார் அமலாக்க துறை இயக்குநர் First Admiral முகமட் ஜவாவி அப்துல்லா கூறினார்.

சனிக்கிழமை (ஜனவரி 15) காலை 7.55 மணியளவில் சுங்கை பாடாங் கடற்கரைக்கு மேற்கே 1.5 கடல் மைல் தொலைவில், பதிவு எண் இல்லாத ஒரு ஃபைபர் படகை தமது சிறப்பு நடவடிக்கைக் குழு தடுத்து வைத்தது.

“MMEA இருப்பதை உணர்ந்த கடத்தல்காரர்கள், தமது படகின் திசையை மாற்றிக் கொண்டனர் 25 முதல் 40 வயதுடைய சந்தேக நபர்கள், கடலில் குதித்து கரையை நோக்கிச் செல்வதற்கு முன், அவர்கள் தடுத்து வைக்கப்பட்டனர்,” என்று அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறினார்.

கைப்பற்றப்பட்ட படகின் சேமிப்பு பெட்டியில் RM414,000 மதிப்புடைய கெத்தும் இலைகளைக் கொண்டிருப்பதாக நம்பப்படும் 230 கருப்பு பிளாஸ்டிக் பொட்டலங்களைக் கண்டறிந்ததாக அவர் கூறினார்.

மேலும் ஆய்வு செய்ததில் இரண்டு சிறிய வெள்ளை பிளாஸ்டிக் பாக்கெட்டுகள் அடங்கிய கருப்பு பையில் 100 ‘pil kuda” ’ இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது, அவற்றின் மதிப்பு RM2,500 ஆகும்.

கெத்தும் இலைகள், மருந்துகள், ஃபைபர் படகுகள் மற்றும் அவுட்போர்டு மோட்டார்கள் உட்பட கைப்பற்றப்பட்ட மொத்த சொத்துக்களின் மதிப்பு RM537,305 என மதிப்பிடப்பட்டுள்ளது என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here