சரவாக் மாநில துணை முதல்வர் ஜேம்ஸ் மாசிங் தனது 72 வயதில் காலமானார்

கூச்சிங், அக்டோபர் 31 :

சரவாக் துணை முதல்வர் ஜேம்ஸ் மாசிங் இன்று காலை 7.05 மணியளவில் தனியார் மருத்துவ மனையில் காலமானார்.

அவரது மரணத்திற்கான காரணம் குறித்த உடனடி விவரங்கள் எதுவும் கிடைக்கவில்லை, ஆனால் சரவாக் அரசியலில் பலம் வாய்ந்தவரான மாசிங் , கோவிட் -19 தொற்றுக் காரணமாக கடந்த செப்டம்பர் 28 ஆம் தேதி அன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பலேவின் சட்டமன்ற உறுப்பினரான மாசிங், 2004 இல் சரவாக் மக்கள் கடைசியை உருவாக்கி, அதன் முதல் தலைவராகாவும் பணியாற்றினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here