பினாங்கு ஆளுநரின் 72ஆவது பிறந்த நாளை முன்னிட்டு இன்றும் நாளையும் டத்தோ, டத்தோ ஶ்ரீ உள்ளிட்ட பல பட்டங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.
பினாங்கு மாநில அரசாங்கத்தால் மக்கள் ஓசை இயக்குநர் ச.கோபால கிருஷ்ணன்@ கோபி இன்று டத்தோ விருது வழங்கி கெளரவிக்கப்பட்டார்.
இந்த டத்தோ விருது குறித்து டத்தோ கோபால கிருஷ்ணன் சண்முகமணி கூறுகையில் என் ஆசான் திரு.ஆதி இராஜகுமாரனை இவ்வேளையில் நினைவு கூருவதாகவும் அவர் நம்முடன் இல்லையென்றாலும் அவரின் ஆசிர்வாதம் எப்பொழுதும் இருக்கிறது என்று தெரிவித்தார்.
இவ்வேளையில் எனக்கு டத்தோ விருது வழங்கி கெளரவித்த பினாங்கு மாநில அரசாங்கத்திற்கும் என்னை வாழ்த்திய நண்பர்கள் உறவினர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்வதாக டத்தோ கோபாலகிருஷ்ணன் தெரிவித்தார்.
























