கெடா மற்றும் மலாக்காவிலுள்ள வெள்ள நிவாரண மையங்களில் 685 பேர் தஞ்சம்

கோலாலம்பூர், நவம்பர் 2 :

நாட்டில் பெய்துவரும் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தினால் கெடா மற்றும் மலாக்காவை சேர்ந்த 685 பேர் தங்களது வாழ்விடத்தை விட்டு வெளியேறி , வெள்ள நிவாரண மையங்களில் (PPS) தஞ்சமடைந்துள்ளனர்.

மலேசிய குடிமைத் தற்காப்புப் படை மற்றும் கெடா பேரிடர் மேலாண்மைக் குழு செயலகத் தலைவர் மேஜர் (PA) முஹமட் முவாஸ் முஹமட் யூசுப் இதுபற்றிக் கூறும்போது, நேற்றுக்காலை 8 மணி வரை கெடாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 526 பேராக இருந்தது. பின்னர் மேலதிகமாக 337 பேர் அவர்கள் வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டு வெள்ள நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்றார்.

நேற்றுக்காலையிலிருந்து 10 வெள்ள நிவாரண மையங்கள் செயல்பட்டு வந்தன. ஆனால் வெள்ளத்தால் பாதிக்கப்படடவர்கள் அதிகரித்ததன் விளைவாக மேலும் 4 வெள்ள நிவாரண மையங்கள் நேற்றிரவு திறக்கப்பட்டன என்றார்.

மேலும், நேற்றிரவு மலாக்காவின் டுரியான் துங்கலில் ஏற்பட்ட வெள்ளத்தால் 40 குடும்பங்களைச் சேர்ந்த 159 பேர் வீடுகளிலிருந்து வெளியேறி வெள்ள நிவாரண மையங்களில் தஞ்சமடைந்திருப்பதாக Melaka CDF இயக்குநர் Lt Col (PA) Cuthbert John Martin Quadra கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here