பாதுகாப்பு நடவடிக்கை எடுக்காவிட்டால் மலாயன் புலி இனம் அழியும் அபாயம்

கோலாலம்பூர்: மலாயா புலி வகையை காப்பாற்ற எதுவும் செய்யாவிட்டால் அடுத்த பத்தாண்டுகளில் அழிந்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது என்று டத்தோஸ்ரீ டாக்டர் வான் ஜுனைடி துவாங்கு ஜாபர் கூறினார். மலாயன் புலி இனத்தின் மக்கள்தொகை மிகவும் கவலைக்கிடமான அளவில் இருப்பதாக தரவுகள் வெளிப்படுத்தியதால், அது அழியும் அபாயத்தில் உள்ளது. முதல் தேசிய புலிகள் கணக்கெடுப்பு 2016-2020 படி, 200 க்கும் குறைவான புலிகள் காடுகளில் உள்ளன என்று அவர் கூறினார்.

அந்த புள்ளிவிவரங்களின் அடிப்படையில், அவைகளை காப்பாற்ற எந்த அசாதாரண நடவடிக்கையும் எடுக்கப்படாவிட்டால், அடுத்த ஐந்து முதல் பத்து ஆண்டுகளுக்குள் அவற்றை இழக்க நேரிடும் என்று சே அலியாஸ் ஹமீட் (PN-Kemaman) எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த பிரதமர் துறை அமைச்சர் மேலும் கூறினார்.

எனவே, 2021 மற்றும் 2030 க்கு இடையில் செயல்படுத்தப்பட வேண்டிய ஒன்பது அம்ச  பாதுகாப்பு திட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக வான் ஜுனைடி சபைக்கு தெரிவித்தார். அதில், தேசிய புலிகள் பாதுகாப்பு பணிக்குழு அமைக்கப்பட உள்ளது என்றார். வனவிலங்கு மற்றும் தேசிய பூங்காத் துறையின் கீழ் மலாயா புலிகள் பாதுகாப்புப் பிரிவும், காவல்துறையின் கீழ் வனவிலங்கு குற்றப் பிரிவும் அமைக்கப்படுவதும் இதில் அடங்கும்  என்றார்.

வான் ஜுனைடி, புலிகளின் எண்ணிக்கை குறைவதற்கான முக்கிய காரணங்களில் காடுகளை அழிப்பதன் காரணமாக இயற்கையான வாழ்விடத்தை இழந்ததாகக் கூறினார். புலிகளின் முக்கிய உணவு மான்கள் என்பதால், சாம்பார் மான்களை அதிகமாக வேட்டையாடுவதும் வீழ்ச்சிக்கு ஒரு காரணம் என்று அவர் குறிப்பிட்டார்.

வான் ஜுனைடி கூறுகையில், நாட்டின் மத்திய வன முதுகெலும்பின் துண்டு துண்டான பகுதிகளை இணைப்பதும் புலிகளின் வாழ்விடப் பகுதியை விரிவுபடுத்த எடுக்கப்படும் நடவடிக்கைகளில் ஒன்றாகும். இந்த நவம்பரில் முடிவடைந்த சாம்பார் மான்களை வேட்டையாடுவதற்கு எதிரான தடையை தொடர வேண்டும் என்றும் அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here