ஓட்டுநர் தேர்வில் தேர்ச்சி பெற்ற சில நிமிடங்களில், சாலை விபத்தில் மேல்நிலை வகுப்பு மாணவர் பலி

பாலிங், நவம்பர் 16 :

கெடாவில் உள்ள இஸ்லாமிய மதப் பள்ளி ஒன்றின் மேல்நிலை வகுப்பு மாணவர் ஒருவர், இன்று சரோக் நவ்வில் (Charok Nau) தனது மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் உரிமத்தைப் பெற்ற சில நிமிடங்களில் சாலை விபத்தில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியினரை துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.

முஹமட் முன்சீர் அப்துல் ரசாக், 19, என்ற மாணவர் செலுத்திய மோட்டார் சைக்கிளை சாலை சந்திப்பு ஒன்றில் தொயோட்டா அன்சர் எம்பிவி கார் மோதியதில், பாதிக்கப்பட்ட மாணவர் தனது மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்டதில் ஏற்பட்ட பலத்த காயங்களால் சம்பவ இடத்திலேயே இறந்தார்.

சிம்பாங் எம்பாட்டில் உள்ள தாமான் பெகாட்ரா இண்டாவைச் சேர்ந்த முன்சீர், தனது Sijil Tinggi Agama Malaysia (STAM) 2020 தேர்வில் சிறந்த தேர்ச்சி பெற்ற பிறகு, கெடாவில் உள்ள இஸ்லாமிய மதப் பள்ளிகளில் முதல் மாணவராக திகழ்ந்தார்.

இன்று காலை 11.30 மணியளவில் நடந்த சம்பவத்தில், யயாசான் கைரியா கம்போங் பிசாங்கின் மாணவரான முன்சீர், பேலிங் நகரத்தில் உள்ள ஓட்டுநர் பள்ளியில் B2 உரிமத் தேர்வில் தேர்ச்சி பெற்று, குபாங்கில் உள்ள தனது பள்ளிக்குத் திரும்பிக் கொண்டிருந்தார்.

முன்சீர் ஒரு சாலைச் சந்திப்பில் இருந்து வெளியே வந்து கொண்டிருந்தபோது, இந்த சம்பவம் நடந்ததாக ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்ததாக பேலிங் மாவட்ட போலீஸ் தலைமைக் கண்காணிப்பாளர் ஷம்சுதின் மாமத் தெரிவித்தார்.

“பேலிங்கில் இருந்து குபாங்கிற்குச் சென்ற MPV-யின் ஓட்டுநர், பாதிக்கப்பட்டவரின் மோட்டார் சைக்கிளைத் தவிர்க்கத் தவறியதால், அந்த வாலிபர் பைக்கில் இருந்து தூக்கி எறியப்பட்டு சாலையின் குறுக்கே விழுந்தார்.

மேலும் பலத்த காயங்கள் காரணமாக அந்த வாலிபர் சம்பவ இடத்திலேயே இறந்தார்,” என்றும் ‘மாணவரின் உடல் பிரேத பரிசோதனைக்காக கூலிம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது’ என்றும் அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here