மலாக்கா, நவம்பர் 18 :
மலாக்கா மாநிலத் தேர்தலில் மக்கள் வெளியே சென்று வாக்களிக்க ஏதுவாக சனிக்கிழமையை (நவ. 20) சிறப்பு விடுமுறையாக மலாக்கா மாநில அரசு அறிவித்துள்ளது.
மாநிலச் செயலாளர் டத்தோ கமெல் முஹமட் வியாழன் (நவம்பர் 18) வெளியிட்ட ஒரு அறிக்கையில், விடுமுறைச் சட்டம் 1951 (சட்டம் 369) இன் உட்பிரிவு 9 (1) இன் படி இந்த அறிவிப்பு இருப்பதாகத் தெரிவித்தார்.
மலாக்காவின் முன்னாள் முதல்வர் டத்தோஸ்ரீ சுலைமான் எம்.டி அலி மாநில சட்டப் பேரவையில் பெரும்பான்மை ஆதரவை இழந்ததை அடுத்து, கடந்த அக். 4ஆம் தேதி மாநிலச் சட்டமன்றம் கலைக்கப்பட்டதைத் தொடர்ந்து, மலாக்கா மாநிலத் தேர்தல் அறிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
– பெர்னாமா





















