மலாக்கா மாநில தேர்தல்: 112 வேட்பாளர்களில் 33 பேர் வைப்புத் தொகையை இழந்தனர்

மலாக்கா மாநில தேர்தலில் நேற்று போட்டியிட்ட  112 வேட்பாளர்களில் 22 சுயேச்சை வேட்பாளர்கள் உட்பட மொத்தம் 33 பேர் வைப்பு தொகையை இழந்தனர். மற்றவர்களில் பெரிகாத்தான் நேஷனல்  கீழ் நின்ற கெராக்கானில் இருந்து இருவர், பிகேஆர் (பக்காத்தான் ஹராப்பான்) இலிருந்து இருவர், எம்சிஏ (பாரிசான் நேஷனல்) வில் இருந்து ஒருவர், பார்ட்டி பூமிபுத்ரா பெர்காசா மலேசியா (புத்ரா) மற்றும் பார்ட்டி பெரிகாத்தான் இந்தியா முஸ்லீம் நேசனல் (இமான்) ஆகியவற்றிலிருந்து ஒருவர் அடங்குவர்.

முந்தைய  மலாக்கா அரசாங்கத்தின் வீழ்ச்சிக்கு காரணமான நான்கு சட்டமன்ற உறுப்பினர்களில் ஒருவரானமாநில முன்னாள் உறுப்பினர் நோரிசாம் ஹசன் பக்தீ பெங்கலன் பத்துவில் சுயேச்சையாக 1,218 வாக்குகளை மட்டுமே பெற்றார். முன்னாள் டிஏபி சட்டமன்ற உறுப்பினர், கடந்த ஆண்டு ஷெரட்டன் நகர்வின் போது கட்சியிலிருந்து விலகி சுயேச்சையாக ஆனார். ஐந்து முனைப் போட்டியில் மொத்தம் 13,528 வாக்குகள் பதிவாகியதில் குறைந்தது 1,691 வாக்குகளைப் பெற வேண்டும்.

தேர்தல் சட்டங்களின்படி, ஒரு மாநில சட்டமன்றத் தொகுதிக்கான வேட்பாளர் போட்டியிட RM5,000 டெபாசிட் செய்ய வேண்டும். மேலும் அவர் மொத்த வாக்குகளில் எட்டில் ஒரு பங்கிற்கு குறைவாகப் பெற்றால் அத்தொகை திருப்பு தரமாட்டாது.

வைப்பு தொகையை இழந்த பிகேஆர் வேட்பாளர்கள் தஞ்சோங் பிடாராவில் ஜைனல் ஹாசன் மற்றும் அயர் லிமாவில் மசேனா பஹாருதீன். கெராக்கான் வேட்பாளர்களைப் பொறுத்தவரை, கோத்தா லக்சமானாவில் ஃபோங் கை லிங் 811 வாக்குகளுடனும்,  பண்டார்  ஹிலிரில் கிளாரிஸ் சான் மியிங் வாங் 594 வாக்குகளுடனும் தோற்றனர். இந்த இரண்டு இடங்களிலும் DAP வேட்பாளர்கள் பெரும் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றனர்.

ஆறு முனைப் போட்டியில் 23 வாக்குகள் பெற்று கடேக்கில் சுயேச்சை மோகன் சிங் குறைந்த வாக்குகளைப் பெற்றார். பாரிசான் நேசனலில் இருந்து மஇகா வேட்பாளர் வெற்றி பெற்றார். மொத்தம் 19 வேட்பாளர்கள், பெரும்பாலும் சுயேச்சைகள், தலா 100க்கும் குறைவான வாக்குகளைப் பெற்றனர். அவர்களில் நான்கு பேர் 50க்கும் குறைவான வாக்குகளைப் பெற்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here