குடியிருப்பில் ஏற்பட்ட திடீர் தீப்பரவலால் 20 குடும்பங்கள் வீடுகளை இழந்துள்ளன!

சாரடோக், நவம்பர் 26 :

அசோன் லோங்ஹவுஸ் (Ason Longhouse), கம்போங் டெம்பாவாய், ஜாலான் உலு ஆவாயில், இன்று காலை ஏற்பட்ட தீப்பரவல் காரணமாக 20 குடும்பங்கள் தங்கள் வீடுகளை இழந்துள்ளன.

இந்த சம்பவம், இன்று காலை 11 மணியளவில் ஏற்பட்டது. இக்குடியிருப்பில் 150 பேர் வசித்து வருகின்றனர்.

சரவாக் தீயணைப்பு மற்றும் மீட்பு பிரிவின் செய்தித் தொடர்பாளர் இதுபற்றிக் கூறியபோது, குறித்த சம்பவம் தொடர்பில் தமது துறை காலை 11.25 மணியளவில் அழைப்பைப் பெற்ற பின்னர், சாரடோக் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலைய (BBP)  தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் அங்கு விரைந்தனர்.

“தீயணைப்பு வீரர்கள் அங்கு சென்றபோது, தீ இரு மாடிப் பகுதிகள் கொண்ட நீண்ட வீட்டின் உயர்த்திற்கு மேலாக எரிந்து கொண்டிருந்ததை அவர்கள் கண்டனர்” என்றார்.

“விரைவாகச் செயல்பட்ட உறுப்பினர்கள் நெருப்பினை அரை மணிநேரத்திற்குள் கட்டுக்குள் கொண்டுவந்தனர். மேலும் காலை 11.47 மணிக்கு தீ முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டது,” என்று அவர் இன்று தொடர்பு கொண்டபோது கூறினார்.

மேலும் தீப்பரவல் மற்றும் இழப்புகளின் அளவை கண்டுபிடிப்பதற்கான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுவருகிறது என்றார்.

“அதிர்ஷ்டவசமாக யாருக்கும் நெருப்பு காயங்கள் அல்லது இறப்புக்கள் எதுவும் ஏற்படாமல் அங்கிருந்த அனைத்து குடிமக்களும் தப்பிக்க முடிந்தது, ஆனால் அந்த நீண்ட வீடு முற்றாக அழிந்து தீயில் நாசமாகியது ” என்று அவர் கூறினார்.

அனைத்து பாதிக்கப்பட்டவர்களும் தற்போது தற்காலிக கூடாரங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். மேலும் சாரடோக் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ அலி பிஜு, சம்பவ இடத்திற்கு வருகை தந்ததுடன், அவர் ஒவ்வொரு பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கும் ரொக்கம் RM5,000 மற்றும் குடியிருப்பாளர்களுக்கான RM10,000 பெறுமதியான கட்டிடப் பொருட்களையும் வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here