சமூக ஊடகங்களில் சைபர் குற்றச்செயல், சைபர் பகடிவதை ஒடுக்கப்பட வேண்டும்

* வழிகாட்டிகளை டிக் டாக் உள்ளிட்ட தரப்பினர் முறையாகக் கடைப்பிடிக்க வேண்டும்
* சைபர் குற்றச்செயல், சைபர் பகடிவதை ஒடுக்கப்பட வேண்டும்
* டிக் டாக் மீது கட்டுப்பாடுகள் விதிக்கும் திட்டம் இல்லை

கடந்த ஜனவரி முதல் தேதி தொடங்கி ஆகஸ்டு 31ஆம் தேதி வரையில் சமூக ஊடகங்களில் இருந்து மொத்தம் 76,002 உள்ளடக்கங்கள் நீக்கப்பட்டன என்று தொடர்புத்துறை அமைச்சர் டத்தோ ஃபாமி ஃபட்ஸில் வியாழக்கிழமை கூறினார்.

ஆனாலும் தொடர்புத்துறை அமைச்சு தொடர்பில் மொத்தம் 10,730 உள்ளடக்கங்களை நீக்க வேண்டும் எனக் கேட்கப்பட்டது. ஆனால் டிக் டாக் நிர்வாகத் தரப்பினர் அவ்வாறு செய்யவில்லை என்று அமைச்சர் தெரிவித்தார்.
மொத்தமாக 86 விழுக்காடு உள்ளடக்கங்கள் நீக்கப்பட்டிருக்கின்றன. சமூக ஊடகத் தரப்பினரின் வழிகாட்டிகள் அடிப்படையில் அவர்களே இந்த நடவடிக்கையை எடுத்திருக்கின்றனர்.

எம்சிஎம்சி எனப்படும் தொடர்பு பல்லூடக ஆணையம் சில உள்ளடக்கங்களை நீக்கும்படி கேட்டிருக்கிறது. அதேசமயம் சமூக ஊடக நிர்வாகத் தரப்பினரின் வழிகாட்டிகள் அடிப்படையில் அவை நீக்கப்பட்டிருக்கின்றன என்றும் அவர் கூறினார். சட்ட ரீதியாக வழிகாட்டிகள் மீறப்படவில்லை என்று டிக் டாக் உள்ளிட்ட தரப்பினர் கருதினால் சம்பந்தப்பட்ட உள்ளடக்கங்கள் நீக்கப்படாது என்றும் அவர் கோலாலம்பூரில் நடைபெற்ற நிருபர்கள் கூட்டத்தில் தெரிவித்தார்.

புக்கிட் அமான் குற்றப் புலனாய்வுத்துறை இயக்குநர் ஆணையர் டத்தோ எம். குமார், துணை அமைச்சர் தியோ நி சிங் ஆகியோரும் இதில் கலந்து கொண்டனர். சைபர் குற்றச்செயல்கள், சைபர் பகடிவதைகள் தொடர்பில் சம்பந்தப்பட்ட சமூக நிர்வாகத் தரப்புடன் சந்திப்புகள் நடத்தி பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டிருக்கின்றன. ஏனெனில் இந்தப் பிரச்சினைகள் தொடர்பில் அத்தரப்பினர் சரியான நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கருதுவதாக அவர் சொன்னார்.

ஊடக டிக் டாக் சமூக ஊடகம் தொடர்பில் நில புலன் விசாரணை அறிக்கைகள் தயாராவதாக அரச மலேசிய படையும் தெரிவித்திருக்கிறது.
டிக் டாக் தரப்பினர் அவ்வளவாக அக்கறை காட்டுவதில்லை. ஸ்கேம் போன்ற மோசடிகள் ஏற்பட்ட பிறகு அதனைத் தீர்க்க சரியான தகவல்கள் கொடுப்பதில் அது மெத்தனமாகச் செயல்படுகிறது என்றும் அவர் கூறினார்.

இந்தப் பிரச்சினைக்குத் தீர்வுகாணும் பொறுப்பைக் குற்றப் புலனாய்வுத்துறை, வர்த்தகக் குற்றப் புலனாய்வுத்துறை, எம்சிஎம்சி போன்ற தரப்பினரிடம் விட்டு விட்டோம் என்று அமைச்சர் கூறினார்.

டிக் டாக் வலைத்தளம் மீது கட்டுப்பாடுகள் விதிக்கும் திட்டம் ஏதும் இதுவரை அரசாங்கத்திடம் இல்லை. ஏனெனில் சமுதாயத்திற்குக் கூடுதல் வருமானம் தரக்கூடிய நிறைய நன்மைகள் இதன்மூலம் கிடைப்பதாகவும் அவர் சொன்னார்.
சைபர் பகடிவதை, ஆன்லைன் மோசடி போன்ற பிரச்சினைகள் மீதுதான் கவனம் செலுத்தப்பட வேண்டும். அதேசமயம் வழிகாட்டிகள், சட்ட விதிமுறைகளை டிக் டாக் பின்பற்ற வேண்டும் என்றும் அவர் கூறினார்.

சீனாவில் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கின்றன. டிக் டாக் பயனீட்டாளர் ஒருவர் தன் அடையாளத்தை உறுதிப்படுத்தாவிடில் அவர் எந்தவிதமான கருத்துப் பதிவுகளையும் செய்வதற்கு அங்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது என்றும் அவர் சொன்னார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here