தனித்து வாழும் பெண் ஒருவர் காதல் மோசடியில் 85,700 வெள்ளியை இழந்தார்

அலோர் காஜா, நவம்பர் 26 :

தனித்து வாழும் தாய் ஒருவர், சமூக வலைத்தளத்தில் அறிமுகமான காதலரின் ஆசை வார்த்தைகளை நம்பி RM85,700 இழந்துள்ளதாக அலோர் காஜா மாவட்ட போலீஸ் தலைவர் அர்ஷாட் அபு தெரிவித்தார்.

மஸ்ஜிட் தானாவைச் சேர்ந்த 59 வயதான பாதிக்கப்பட்ட பெண், instagram சமூக வலைத்தளத்தில் இந்த ஆண்டு ஜூலை மாதம், Ahmed Hashima என்ற பயனரின் பெயரில் அமெரிக்காவில் வசித்து வருவதாக தன்னை அறிமுகம் செய்துகொண்ட ஒருவருடன் நட்பாகினார்.

” பின்னர், வேலையில்லாதவரான பாதிக்கப்பட்ட பெண்ணும் சந்தேக நபரும் Whatsapp வழியாக தொடர்பு கொண்டனர், மேலும் சந்தேக நபர் பாதிக்கப்பட்டவருக்கு கைப்பைகள், காலணிகள், கடிகாரங்கள், தங்க நெக்லஸ் மற்றும் காப்பு போன்ற ஆடம்பர பரிசுகளையம் 15,000 அமெரிக்க டாலர் ரொக்கத்தையும் அவர்களது நட்பின் சின்னமாக அனுப்ப விரும்பியதாகவும் அவர் கூறியதாக “இன்று ஒரு அறிக்கையில் அவர் கூறினார்.

ஆகஸ்ட் 2 ஆம் தேதி, அந்தப் பெண்ணை கூரியர் நிறுவனத்தின் ஒரு முகவர் தொடர்பு கொண்டு, அவர் குறித்த பரிசுகளை பெறும் முன்னர், பணம் செலுத்த வேண்டும் என்று கூறினார்.

எனவே பாதிக்கப்பட்ட பெண் ஆகஸ்ட் முதல் அக்டோபர் வரை பல்வேறு வங்கிக்கணக்குகளில் பல பரிவர்த்தனைகள் மூலமாக மொத்தம் RM85,700 வரை பணத்தை பரிமாற்றம் செய்துள்ளார், ஆனால் அவர் எந்த பரிசுகளையும் பெறவில்லை.

“உண்மையில், குறித்த ஸ்கேமர் (scammer) இன்னமும் பாதிக்கப்பட்டவரிடமிருந்து பணத்தை கேட்டுக்கொண்டிருக்கிறார் என்றும் அவர் தனிநபரால் ஏமாற்றப்பட்டதாக சந்தேகிக்கப்படுவதாகவும் அர்ஷாட் அபு கூறினார் .

மேலும் ,இந்த வழக்கு தண்டனைச் சட்டப் பிரிவு 420 இன் கீழ் விசாரணை செய்யப்படுகிறது, “என்றும் அவர் கூறினார்.

– பெர்னாமா

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here