கொடிய விஷமுள்ள puffer மீன்கள் இன்னும் சந்தையில் விற்கப்படுகிறது – மீன் விநியோகிப்பாளர்கள் சங்கம்

கொடிய விஷமுள்ள puffer மீன்கள் இன்னும் சந்தையில் விற்கப்படுகிறது என்று மலேசிய மீன் விநியோகிப்பாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

ஊடகங்களில் வெளியானது போல இந்த விஷ மீன்களை சாப்பிட்டு உயிரிழப்புகள் ஏற்பட்டாலும், இன்னும் அவை சந்தையில் விற்கப்படுகின்றன என்று அதன் துணைத் தலைவர் தை வை சன் கூறினார்.

“மக்களின் உடல்நலம் மற்றும் உயிருக்கு ஆபத்து ஏற்படுவதைத் தடுக்க, கொடிய விஷ மீன்களின் விற்பனையை உடனடியாக நிறுத்துமாறு நான் வேண்டுகோள் விடுக்கிறேன். சமீபத்தில் மார்ச் மாதம் குளுவாங்கைச் சேர்ந்த வயதான தம்பதியினரின் மரணம் ஒரு நிகழ்வு அல்ல, ஏனெனில் கடந்த ஆண்டு கூலாயில் ஒன்று உட்பட இதே போன்ற பிற சம்பவங்களும் பதிவாகியுள்ளன” என்று கூறினார்.

“puffer மீனில் 25 மில்லிகிராம் அதாவது ஒரு நபரை கொல்லும் அளவுக்கு நச்சுப் பொருள் உள்ளது,” என்று இன்று ஞாயிற்றுக்கிழமை (மே 7) நடைபெற்ற ஜோகூர் பாரு மீன் விநியோகிப்பாளர்கள் சங்கத்தின் 44-வது ஆண்டு விழாவில் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here