கிளந்தானில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 471ஆக உயர்வு ; ஐந்து நிவாரண மையங்கள் திறக்கப்பட்டன

கோத்தா பாரு, டிசம்பர் 17 :

கிளந்தானில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக 90 குடும்பங்களைச் சேர்ந்த மொத்தம் 471 பேர் தமது வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டு, குவா மூசாங் மற்றும் கோல கிராய் ஆகிய இடங்களில் உள்ள ஐந்து நிவாரண மையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

மாநிலத்தில் நேற்று முதல் கனமழை பெய்து வருவதைத் தொடர்ந்து மூன்றாவது கட்ட வெள்ளம் இன்று தொடங்கியது.

மாநில நலத்துறையின் வெள்ள போர்ட்டலின் பிற்பகல் 1.20 மணி நிலவரப்படி, 471 பாதிக்கப்பட்டவர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர்.

இன்று காலை 9 மணி முதல் அவர்கள் கட்டம் கட்டமாக வெளியேற்றப்பட்டதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

SK ஃபெல்டா அரிங் 7, SK லிமாவ் கஸ்தூரி 1, SMK கோலா க்ராய், கோல கிராய் கால்நடை அலுவலகம் மற்றும் SK சுங்கை எம்பாக் ஆகிய இடங்களில் ஐந்து நிவாரண மையங்கள் திறக்கப்பட்டன.

கனமழை காரணமாக தனா மேராவில் உள்ள கோலோக் நதி இன்று அபாய அளவை தாண்டி உயர்ந்தது. மேலும் நண்பகல் 1 மணி நிலவரப்படி, நீர்மட்டம் 23.91 மீட்டராக இருந்தது, இது அபாயக் குறியான 23.50 மீட்டருக்கு மேல் 0.41 மீட்டர் உயர்வாக உள்ளது.

இரண்டு மாவட்டங்களில் உள்ள ஆறுகளும் பிற்பகல் 1.15 மணிக்கு அபாய எச்சரிக்கை அளவை எட்டியதாக போர்டல் கூறியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here