ஆதரவற்ற மற்றும் ஊனமுற்றோர் நல மையத்தின் பெயரைப் பயன்படுத்தி, இணையத்தில் நன்கொடை வசூல் மோசடியில் ஈடுபட்ட 14 பேர் கைது

கோம்பாக், நவம்பர் 29 :

ஆதரவற்றோர் மற்றும் ஊனமுற்றோர் நல மையத்தின் பெயரைப் பயன்படுத்தி, இணையத்தில் நன்கொடை வசூல் மோசடியில் ஈடுபட்டதாக, சந்தேகத்தின் பேரில் இதுவரை 14 நபர்களை போலீசார் கைது செய்துள்ளனர் என்று காவல்துறை துணை ஆய்வாளர் டத்தோஸ்ரீ மஸ்லான் லாசிம் தெரிவித்தார்.

‘நலன்புரி நிலையத்தின் பெயரைப் பயன்படுத்துவது பொதுமக்களின் அனுதாபத்தைப் பெறுவதற்கும், பணம் வசூலிக்கும் செயல்முறையை எளிதாக்குவதற்குமே’ என்று அவர் கோம்பாக் மாவட்ட காவல்துறை தலைமையகத்தில் (IPD) இன்று நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

“அனாதைகள், மத்ரஸாக்கள் மற்றும் ஊனமுற்றோருக்கான நல நிதியிலிருந்து நன்கொடைகளைப் பெறுவதற்காக, பாதிக்கப்பட்டவர்களைத் தொடர்பு கொள்ளும் தந்திரத்தை இந்த மோசடிக்குழு பயன்படுத்தியது.

“அனுதாபம் கொண்ட பாதிக்கப்பட்டவர்கள், பணம் அனாதரவற்ற பிள்ளைகளுக்கு பயன்படுத்துவதாக நம்பப்படும் வங்கிக் கணக்குகளில் பணத்தை வைப்புச் செய்வார்கள்” என்று கூறினார்.

பாதிக்கப்பட்டவரைத் தொடர்புகொள்வதற்கு முன்பு, சந்தேகநபர்கள் உரையாடலின் ஸ்கிரிப்டைத் தயாரித்தது, ஆரம்ப விசாரணையில் கண்டறியப்பட்டதாக மஸ்லான் கூறினார்.

“அவர்கள் நன்கொடைகள் கேட்பதற்காக, சில நலன்புரி மையங்களில் இருந்து தாங்கள் வருவதாக, தங்களை வெளிப்படையாக அறிமுகப்படுத்திக் கொள்வார்கள்.

மேலும் இந்த மோசடிக்குழு இன்று வரை செயலில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

“மோசடி செய்ததற்காக குற்றவியல் சட்டம் பிரிவு 420 இன் கீழ் வழக்கு விசாரிக்கப்படுகிறது,” என்று அவர் கூறினார்.

இதுகுறித்து மேலும் கூறிய மஸ்லான், பொதுமக்கள் எளிதில் ஏமாற வேண்டாம் என்றும், பணப் பரிவர்த்தனை செய்வதற்கு முன்பு போலீஸாரிடம் முதலில் சோதனை செய்து கொள்ளுமாறும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here