கோவிட்-19: 96.8% (நவம்பர் 29) வரை முழுமையாக தடுப்பூசியை போட்டுக் கொண்டுள்ளனர்

கோலாலம்பூர்: மலேசியாவில் மொத்தம் 22,665,493 நபர்கள் அல்லது வயது வந்தோரில் (பெரியவர்கள்) 96.8% பேர் திங்கள்கிழமை (நவம்பர் 29) வரை கோவிட்-19 தடுப்பூசியை முடித்துள்ளனர்.

சுகாதார அமைச்சின் CovidNow போர்ட்டலின் அடிப்படையில், மொத்தம் 23,010,447 நபர்கள் அல்லது வயது வந்தோரில் 98.3% பேர் குறைந்தபட்சம் ஒரு டோஸ் தடுப்பூசியைப் பெற்றுள்ளனர்.

12 முதல் 17 வயதிற்குட்பட்ட இளம் பருவத்தினரைப் பொறுத்தவரை, மொத்தம் 2,705,253 நபர்கள் அல்லது 85.9% பேர் தடுப்பூசியை முடித்துள்ளனர். அதே சமயம் 2,819,774 அல்லது 89.5% பேர் தடுப்பூசியின் ஒரு டோஸாவது பெற்றுள்ளனர்.

நேற்று மொத்தம் 109,139 தடுப்பூசிகள் வழங்கப்பட்டன. இரண்டாவது டோஸாக 6,711, முதல் டோஸ் பெறுபவர்களுக்கு 4,538 டோஸ் மற்றும் பூஸ்டர் டோஸாக 97,890.

தேசிய கோவிட்-19 நோய்த்தடுப்புத் திட்டத்தின் கீழ் இதுவரை வழங்கப்பட்ட தடுப்பூசிகளின் மொத்த எண்ணிக்கை 53,345,233 ஆக உள்ளது, இதில் 2,332,750 பூஸ்டர் டோஸ் அடங்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here