கோவிட்-19 தொற்றை கட்டுப்படுத்த ஆஸ்ட்ராஸெனிகா நிறுவனத்தின் மாத்திரையை கொள்வனவு செய்கிறது சிங்கப்பூர்

சிங்கப்பூர்:

கோவிட்-19 தொற்றுக்கு சிகிச்சை அளிக்கும் மாத்திரையை ஆஸ்ட்ராஸெனிகா நிறுவனத்திடம் இருந்து வாங்க இருக்கிறது. அதற்கான ஒப்பந்தத்தில் சிங்கப்பூர் கையெழுத்திட்டுள்ளது.

இவ்வாண்டு இறுதிக்குள் அந்த மாத்திரை சிங்கப்பூருக்கு வந்தடையும் என உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஆஸ்ட்ராஸெனிகா நிறுவனம் ‘ஆன்டிபாடி’ எனும் தொற்றை அழிக்கும் அணுக்கள் உள்ள இந்த மாத்திரையான ‘எவுஷெல்ட்’ (Evusheld) ஐ வெளியிட்டுள்ளது.

இந்த மாத்திரையில் நீண்டகாலத்துக்கு செயல்படக்கூடிய இரண்டு வகை ‘ஆன்டிபாடிகள்’ உள்ளன.

இந்த ‘ஆன்டிபாடிகள்’, உடலில் ஏற்படும் கொவிட்-19 தொற்றை அடையாளம் கண்டு செயலிழக்கச் செய்யும் ஆற்றல் பெற்றிருக்கும். இவை உடலுக்குள் வளர்ந்து மாற்றமடைந்து செயல்படத் தொடங்குவதற்கு கூடுதல் காலம் எடுத்துக்கொள்ளும்.

மேலும், ‘எவுஷெல்ட்’ மாத்திரை உடலில் ஓராண்டு வரை செயல்படக்கூடியது. மிதமான நோய் அறிகுறிகள் ஏற்பட்ட ஒருவர் மூன்று நாள்களுக்குள் ‘எவுஷெல்ட்’ மாத்திரையை எடுத்துக்கொண்டால், அது கடும் நோய் அல்லது மரணம் ஏற்படும் அபாயத்தை 88 விழுக்காடு வரை குறைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here