ஐந்து நாட்களில் சுமார் RM5 மில்லியன் சம்மன்களை வசூலித்தது பினாங்கு போலீஸ்

ஜார்ஜ்டவுன், டிசம்பர் 13 :

கடந்த வியாழன் முதல் நேற்று வரை மலேசியக் குடும்ப அபிலாஷைகள் 100 நாட்களுடன் இணைந்து, போக்குவரத்து சம்மன்களில் 80 விழுக்காடு தள்ளுபடி சலுகையை அமல்படுத்தியதில் இருந்து, பினாங்கு போலீஸ் கிட்டத்தட்ட 5 மில்லியன் வெள்ளி சம்மன்களை வசூல் செய்துள்ளது என்று பினாங்கு போக்குவரத்து அமலாக்கப் புலனாய்வுத் துறையின் தலைவர், கண்காணிப்பாளர் ஜாஃப்ரி சோகாப்லி தெரிவித்தார்.

சம்மன் செலுத்தும் கவுண்டரில் தற்போது நிலைமை கட்டுக்குள் உள்ளது என்றும் முந்தைய இரண்டு நாட்களை விட இன்று மக்கள் கூட்டம் குறைவாகவே இருந்தது என்றார்.

“அனைத்து மாநில மாவட்ட காவல்துறை தலைமையகத்தின் (IPD) போக்குவரத்துக் கிளைகளில் உள்ள சம்மன்கள் செலுத்தும் கவுன்டர்களைப் பார்வையிட்ட பின்னர் பொதுமக்களிடமிருந்து வசூலிக்கப்பட்ட சம்மன்களின் விளைவாக இந்த சேகரிப்பு உள்ளது” என்று அவர் கூறினார்.

நேற்றுடன் முடிவடைய இருந்த சம்மன்கள் செலுத்தும் தள்ளுபடி சலுகைக் காலம் டிசம்பர் 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு, சம்மனைத் செலுத்துவதற்கு பொதுமக்களுக்கு கூடுதல் அவகாசம் அளிக்கப்பட்டது. இந்த 80 விழுக்காடு தள்ளுபடி நேரத்தில், தங்கள் சம்மனை செலுத்த பொதுமக்கள் வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு போலீசார் அறிவுறுத்துவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here