சுகாதார அமைச்சகம் கடந்த 24 மணி நேரத்தில் 4,097 கோவிட் -19 தொற்றுகளை பதிவு செய்துள்ளது. இது நேற்று 3,504 தொற்றுகளாக இருந்தது. மொத்த நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை இப்போது 2,699,240 தொற்றுகளாக உள்ளது என்று சுகாதார தலைமை இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா கூறினார்.
4,301 நோயாளிகள் குணமடைந்துள்ளனர் என்றார்.இதற்கிடையில், 382 நோயாளிகள் தீவிர சிகிச்சை பிரிவுகளில் (ICU) உள்ளனர் அ.வர்களில் 330 பேர் கோவிட்-19 தொற்று எனவும் மற்றும் 52 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படுகிறார்கள்;
ஐசியுவில் உள்ள நோயாளிகளில், 201 பேருக்கு சுவாச உதவி தேவைப்பட்டது. 144 பேர் கோவிட்-19 க்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள 57 பேர் தொற்று இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறார்கள்.
இன்று 4,079 உள்ளூர் நோய்த்தொற்றுகள் உள்ளன. இதில் 3,821 மலேசியர்கள் மற்றும் 258 வெளிநாட்டினர் மற்றும் 18 இறக்குமதி செய்யப்பட்ட வழக்குகள் உள்ளன. இதில் 2.1% நோயாளிகள் மட்டுமே 3, 4 அல்லது 5 ஆவது பிரிவில் இருந்தனர்.
























